Wednesday, March 2, 2016

நல்ல விலை போகும் நாவல்

நல்ல விலை போகும் நாவல்

திருப்புவனம் அருகே பூவந்தியில் ஆடி மாத சீசன் பழமான நாவல் பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. பூவந்தியில் இருந்து மேலூர் செல்லும் வழியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நாவல் பழ தோப்பு அமைந்துள்ளது. நாட்டு ரகத்தில் பழத்தின் அளவு சிறியதாக இருக்கும் ஆனால் ஒட்டு ரகத்தில் பழத்தின் அளவு பெரியதாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும் என்பதால் ஒட்டு ரகத்தையே அதிகளவு நடவு செய்துள்ளனர்.
சொட்டு நீர் பாசனம் மூலம் 24 மணி நேரமும் நாவல் பழ மரவேரில் தண்ணீர் விழும்படி செய்துள்ளனர்.
Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran




வீரிய ஒட்டு ரகம் என்பதால் மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் இருந்து பழம் பறிக்கலாம். பெங்களுரூவை பூர்வீகமாக கொண்ட ரகம் என்பதால் விளைச்சலும் சற்று அதிகமாகவும் பழத்தின் அளவும் பெரியதாகவும் இருக்கும்.
ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மூன்று மாதங்கள் சீசன் என்பதால் தற்போது பழங்கள் அதிகளவு விளைச்சல் உள்ளது. பூவந்தியில் 50 ஏக்கர் பரப்பளவில் 100 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு மரத்தில் இருந்து தினசரி 5 கிலோ முதல் 8 கிலோ வரை பறிக்கலாம். சீசன் நெருங்க நெருங்க பழத்தின் அளவு அதிகரிக்கும்.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பூவந்தியில் வந்து நாவல் பழம் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யார் வந்தாலும் கிலோ ரூ.120 என விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் 120 ரூபாய்க்கு வாங்கி சென்று கிலோ ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர்.
நன்றி: தினகரன்

No comments:

Post a Comment