Thursday, August 20, 2015

கட்டு மந்திரம்


கட்டு மந்திரம்

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்
எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு
1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு    
      முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்

பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பு+மியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே                      
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)

கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச்      
  சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து 
  செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்

தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்

http://kthillairaj.blogspot.co.uk/2011/11/kattu-mandhiram-protection-mantras-for.html

No comments:

Post a Comment