கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை
பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு முதல் நாளே 6 மணி நேரம் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு, 1 முறை அலசி நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக காற்று புகும் படி மூடி விடவும். காலையில் நன்கு முளைத்திருக்கும்.
இந்த பயறு 1 கப், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் விருப்பமானால் வெள்ளரிப் பிஞ்சு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையில் இஞ்சி சாறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும். இஞ்சி சாறுக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். அவ்வாறு எலுமிச்சை சாறு கலந்தால் கண்டிப்பாகத் தேங்காய் துருவல் போடக்கூடாது.

No comments:
Post a Comment