Tuesday, December 29, 2015

எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க!

”விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வரு மானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்.
தோட்ட வேலையில் முனைப்பாக இருந்த பாஸ்கரைச் சந்தித்தபோ து. ”தென்னை, வாழையைத் தவிர மத்த வெள்ளாமையைச் செய்றதி ல்லை. நாலு ஏக்கர் தென்னந்தோப்புல தேனீப் பெட்டிகளை வெச்சி ருக்கேன். 10 வருஷத்துக்கு முன்ன சிவகிரியில இரு க்கற தண்டாயு தபாணிதான் தேனீ வளர் க்கப் பயிற்சி கொடுத்தாரு. ஆரம்பத்துல ரெண்டு பெட்டியை வெச்சு, கொஞ்சம், கொஞ்சமா தேன் எடுக்க கத்துகிட்டேன் . இப்ப 15 பெட்டி வரைக்கும் வெச்சிருக் கேன். குறைஞ்சது 10 பெட்டிகளுக்கு மேல வெச்சாதான் நல்ல வருமானம் கிடைக்கும். இதுக்கு முதலீடு னு பாத்தா ரொம்ப ரொம்பக் குறைவுதான். 20 ஆயிரம் தேனீக்களோ ட ஒரு பெட்டி 1,500 ரூபாய்க்குக் கிடைக்குது. பெட்டியை வாங்கிட்டு வந்து தோட்டத்துல வெச்சுட்டாப் போதும். வேற எந்தச்செலவும் இல் லை. தினமும் ஒரு பார்வை பாக்கணும். தினமும் பாக் கலைனாலும் வாரம் ஒரு முறையாவது பெட்டியில எறும்பு, கரை யான் ஏறியிருக் கானு பாத்தாப்போதும். அவ்வளவுதான் பராம ரிப்பு!” என்று எளிய முன்னுரையிலேயே எல்லாவற்றையும் புரிய வைத் தவர்,
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் !
”எங்க தோப்புல தேனீ வளர்க்க ஆரம்பிச்சதுல இருந்து விவசாயமும் அருமையா இருக்கு. தேனீக்களோட அயல் மகரந்தச் சேர்க்கை கார ணமா வாழை உற்பத்தியும் அதிகரிச்சிருக்கு. தென்னை மரமும் முன் னைக் காட்டிலும் இப்ப நல்லா இருக்கு. ஆரம்பத்துல விளையாட் டா ஆரம்பிச்சது. இப்ப வருமானத் தோட, விளைச்சலையும் அதிகரிச் சுருக்கு. என் மனைவி சங்கீதா, மகள் இலக்கியாகூட தேனீக்க ளை பயப்படாம, பக்குவமா கையா ள பழகிட்டாங்க.
என்னைவிட அவங்கதான் தினமு ம் அதைப் பராமரிக்கறவங்க. சில நேரம் மழை இல்லாம விவசாயம் பொய்ச்சுட்டாலும்… தேனீ வளர்ப்பே அந்த வருஷம் வருமானத்தை சரி பண்ணிடும்’’ என்ற பாஸ்கர், தேனீப் பெட்டிகளை அமைக்கும் முறைகளைப்பற்றி சொல்லத்தொடங்கி னார். அதைப் பாடமாகத் தொகுத்திருக்கி றோம்.
2 அடுக்குகள்… 11 சட்டங்கள் !
‘தேனீ வளர்ப்புப்பெட்டியில் இரண்டு அடுக் குகள் இருக்கும். மேல் அடுக்கில் சதுர வடி விலான 5 சட்டங்கள் இருக்கும். கீழ் அடுக் கில் 6 சட்டங்கள் இருக்கும். மேல் அடுக் கை தேன் சேகரிக்கவும், கீழ் அடுக்கை, குஞ்சுகள் மற்றும் தேனீக்க ளுக்காகவும் ஒதுக்க வேண்டும். கீழ் அடுக்கில்தான் தேனீக்கள் அடை கட்டி வசிக்கும். ஒவ்வொரு சட்டமும் 3செ.மீ. இடை வெளியி ல் இருக்கும். அடைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இரு ப்பதற்காகத்தான் இந்த இடைவெளி. இந்தச் சட்டம் மேற்புறமாக உருவி எடுக்கும்படியான அமைப்பில் இருக்கும்.
சட்டம் அடங்கிய ஈரடுக்குப் பெட்டியின் அடிப்புறத்தில் ஒரு ‘ஸ்டாண்ட்’ இருக்கும். அந்த ஸ்டாண்டின் அடிப்பகுதியை நிலத்தில் ஊன்றி வைக்க வே ண்டும். பெட்டி, நிலத்திலிருந் து 2 அடி உயரத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண் டும். அப்போதுதான் தான் கொ ண்டு வரும் தேனை, எளிதாக தேனீக்கள் கூட்டில் வைக்க முடியும். நாமும் சிரமப்படாம ல் சட்டத்தை எடுத்து பெட்டியைப் பராமரிக்க ஏதுவாகவும் இருக்கு ம். பெட்டியின் அடிப்பாகத்தில் தேனீக்கள் வந்து செல்லும் அள வுக்கு சிறிய துளை இருக்கும். அத்துளையின் முன்தான் காவல்காரத் தேனீ க்கள் இருக்கும். பெட்டியின் மேற்புறத்தில் பாலிதீன் பை யைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இது பெட்டிக்கு நிழலைத் தருவதோடு, மழை யிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொரு பெட்டிக்குமான இடைவெளி 5 முதல் 6 அடி இருக்க வேண்டும்.
இது தனி உலகம் !
ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று மூன்று வகைகள் உள்ள தேனீ குடும்பம், ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கு ம். ஒவ்வொரு வகை தேனீயும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். ராணித் தேனீக்கு… இளம் தே னீக்களின் தலைப்பகுதியில் உற்பத்தி ஆகும் ‘ராயல் ஜெல் லியை’ தின்று, முட்டை வைப் பது மட்டும்தான் வேலை. இது வாழ்வில் ஒரே முறைதான் ஆண் தேனீயுடன் உறவு கொள் ளும். இதன்ஆயுள் காலம் 3 ஆண்டுகள். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித்தேனீ மட்டும்தான் இருக்கும். அடை கட்டுவது, இளம் தேனீக்களைப் பராமரிப்பது, மகரந்தம் இருக்கும் திசையைக் காட்டு வது, தேன் சேகரிப்பது போன்ற வேலைகளை வேலைக்காரத் தேனீ க்கள் செய்யும். இவற்றின் ஆயு ள் காலம் நான்கு முதல் ஆறு மாதங்கள். இவற்றின் எண்ணி க்கை ஆயிரக்கணக்கில் இருக் கும். இனப் பெருக்கத்துக்கு மட் டும் பயன்படும் ஆண் தேனீக்க ளின் ஆயுட் காலம் 2 முதல் 4 மாதங்கள். ஒவ்வொரு பெட்டி யிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆண் தேனீக்கள் இருக்கும்.
பட்டத்து ராணி !
ராணித் தேனீ, 14-15 நாட்களிலும்; வேலைக்காரத் தேனீ, 21 நாட்களி லும்; ஆண் தேனீ, 24 நாட்களிலும் முட்டையில் இருந்து வெளியில் வரும். வெளிவந்ததுமே ராணித் தேனீ பறக்க ஆரம்பித்துவிடும். ஒரு பெட்டியில் உள்ள ராணித் தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள் ள ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித் தேனீயாக பதவி யில் அமர வைக்கும் வகையில் ராயல் ஜெல்லிகளைக் கொடுத்து வே லைக்கார தேனீக்கள் வளர்க்க ஆரம்பிக்கும். வயதான ராணித் தேனீ இறந்துவிட்டால், இளம் ராணித் தேனீ பதவிக்கு வரும்.
எதிரிகள் உஷார் !
தேனீ வளர்ப்பில் முக்கியமான விஷயம்… தேன் அடையில ராணித் தேனீ இருப்பதைக் கண்காணிப்பதுதான். அடிக்கடி அதைப் பரிசோதி க்க வேண்டும். அடையில் உள்ள அறைகளில் பெரிய அறைதான் ராணித் தேனீயின் அறை. அங்கே அது இல்லைஎன்றால் வேறு பெட் டியில இருந்து ஒரு ராணித் தேனீயைப் பிடித்து வைக்க வேண்டும். பல்லி, ஓணான், கதண்டு, சிலந்தி ஆகியவை தேனீக்களின் முக்கிய எதிரிகள். இவை பெட்டிக்குள் போகாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். அடை உள்ள சட்டத்தை ஒரு குழந்தையைத் தூக்குவது போல பக்குவமாக பொறுமையாகத் தூக்கினால்… தேனீக்கள் நம்மைக் கொட்டாது.
தொழில்நுட்பங்களைப் பக்குவமாக விவரித்த பாஸ்கர் நிறைவாக, ”ஒரு தேனீப் பெட்டியிலி ருந்து வருஷத்துக்கு 10 கிலோ தேன் கிடைக் கும். என்கிட்ட இருக்குற 15 பெட்டிகள்ல இருந் து 150 கிலோ அளவுக்கு தேன் கிடைக்குது. ஒரு கிலோ 300 ரூபாய்னு விற்பனை பண்றேன். ஆக, பெருசா எந்த செலவும் இல்லாம… நாலு ஏக்கர் தென்னைக்கு நடுவுல தேனீ வளர்க்கற தால வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் கிடைக் குது. தென்னையில கிடைக்கற வருமானம் தனி! வேற என்ன வேணும் நமக்கு!” என்று உற்சாகமாகக் கேட்டு விடைகொடுத்தார்.
பாஸ்கர் சொல்லும் ‘வருமானக் கணக்கு’க்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன். ”நான் 5 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். ஏழு வருஷமா தேனீ வளர்ப்பையும் செஞ்சுட் டு வர்றேன். மொத்தமா 5 ஏக்கர்ல விவசாயம் செஞ்சு கிடைக்கற லாபத்தைவிட, தேனீ வளர்ப்புலதான் அதிக லாபம் கிடைக்குது” என் கிறார், உறுதியான குரலில்!   
தொடர்புக்கு,
பாஸ்கர், செல்போன்: 99425-81333
தண்டாயுதபாணி, செல்போன்: 94433-41679
பரமானந்தம், செல்போன்: 94888-50363.
பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
தொலைபேசி: 0422-6611214,414.

மகசூலைக் கூட்டும் மகரந்தச் சேர்க்கை !

தேனீ வளர்ப்பு தொடர்பாக விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த தண்டாயு தபாணி. ”10 வயசுல இருந்தே தேனீக்கள் மேல எனக்கு ஆர்வம். பொ ழுதுபோக்கா தெரிஞ்சுக்கிட்ட விஷயந்தான் இப்ப எனக்கு சோறு போடுது. தேனீ வளர்ப்புல நான் கத்துக்கிட்ட விஷயங்கள மத்தவங்க ளுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஆயிரத்துக் கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். பயிர்களுக்கு இடையில ஊடுபயிர் சாகுபடி செய்ற மாதிரி தேனீ வளர்ப்பையும் செஞ்சா… மகசூலையும் கூட்டி, தனி வருமானத்தை யும் கொடுக்கிற வள்ளல்கள்தான், தேனீக்கள்.
உதாரணமா, சூரியகாந்திச் செடியில மகரந்தச் சேர்க்கை க்காக ஒவ் வொரு பூவையும் காகிதம் அல்லது துணியை வெச்சு உரசி விட்டு, மகரந்தத் தைக் காத்துல பரவ விடுவாங் க. ஆனா, அந்தத் தோட்டத்துல தேனீக்களை வளத்தா இந்த வேலையை நாம செய்ய வே ண்டியதில்லை. அதை தேனீக் கள் செஞ்சுடும். இதனால, உட ல் உழைப்பும் நேரமும் நமக்கு மிச்சம். மகசூல் அதிகரிக்கிற தோட தேன் மூலமா கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஆரம்பத்து லயே அதிகளவுல முதலீடு செய்யாம… 10 பெட்டிகளை மட்டும் வாங் கி, ஆரம்பிக்கணும். கொஞ்சம் தொழில்நுட்பங்களை அனுபவ ரீதியா தெரிஞ்சுக்கிட்டா… இந்த பெட்டிகள்ல இருந்து நாமளே அடுத்தடுத்த ப் பெட்டிகளை உருவாக்கிக்க முடியும். விவசாயிகள் மட்டும்தானு இல்லை. நகரத்துல இருக்கறவங்ககூட தேனீக்களை வளர்த்து வரு மானம் பாக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார், தண்டாயுதபாணி.

அடுக்குத் தேனீக்கள் !

அடுக்குத் தேனீக்களை வளர்க்கும் முறைகளைப் பற்றி, திருவண் ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த தேனீ வளர்ப்புப் பயிற்சியாளர் பரமானந்தம் சொன்ன தகவல்கள்…
”அடுக்குத் தேனீக்கள் அடங்கியப் பெட்டிகள், பலரிடமும் விலை க்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்ல து பெட்டியைத் தயார் செய்துகொண்டு… கரையான் புற்று, மரப்பொ ந்து, பாறை இடுக்குகள் ஆகிய இடங்களில் இருக்கும் அடுக்குத் தேனீ க்களை எடுத்து, பெட்டியில் வைத்தும் வளர்க்கலாம். நாம் சேகரித்து வரும் தேன் அடையை, தேன் பெட்டியிலிருக்கும் சட்டத் தில் வாழைநார் கொண்டு முதலில் கட்ட வேண்டும். பிறகு, வெள் ளை நிற துணியைப் பயன்படுத்தி, ராணித் தேனீ உள்ள தேனீக் கூட்டத்தைச் சேகரித்து வந்து, பெட்டியில் வைக்க வேண்டும் (வேறு நிற துணிகளைப் பயன்படுத்தினால், தேனீக்கள் ஓடிவிடும்). ராணித் தேனீயைப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், வேலைக்காரத் தேனீக்க ள் வந்து சேர்ந்துவிடும். ராணித் தேனீயைப் பெட்டியின் கீழ்ப்பகுதி யில் இருக்கும் குஞ்சுகளின் அறையில் வைத்து விடலாம்.
தேன் அடை வைக்கப்பட்ட 10 முதல் 15 நாட்களில் சட்டங்க ளில் மெழுகு பிடித்து வளர்ந் து விடும். குஞ்சுகளின் அறை நிரம்பிய பிறகு, முட்டைகள் குறைவாக இருக்கும் ஒரு அடையை எடுத்து, இரண்டாக வெட்டி, தேன் அறையில் உள் ள இரண்டு சட்டங்களில் கட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் மற்ற சட்டங்களிலும் தேனீக்கள் அடையை உருவாக்கிவிடும். பூக்களின் சீசனைப் பொரு த்து… 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் அரை கிலோ முதல் 3 கிலோ வரை தேன் எடுக்க முடியும்.
ஏக்கருக்கு 75 தேனீப் பெட்டிகள் !
பொதுவாக, இந்தியத் தேனீ க்கள் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குச் சென்று தேன் சேகரிக்கும் குணமு டையவை. இவற்றை 10 அடி க்கு ஒரு பெட்டி வீதம் வைத் து வளர்க்கலாம். தென்னை, பாக்கு மரத்தோப்புகளாக இருந்தால், ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 5 பெட்டி முதல் 75 பெட் டிகள் வரை வைக்கலாம். இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை அதிகரி க்கும். தேனீப் பெட்டிகளை நிழல் பகுதியில் வைப்பது நல்லது. தென் னை மற்றும் பாக்கு மட்டைகளை பெட்டிமீது வைக்க வேண்டும். இத ன் மூலம் மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோ டு, தேனீக்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
மாதம் 2 அறுவடை !
தேன் சேகரிப்பதற்கு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, கையால் இயக்கும் புகைபோக்கியில் காய்ந்த தென்னை நாரினைத் தீயிட்டுக் கொளுத்தி, புகையை தேன் அடை மீது ஊதி விட்டால்… தேனீக்கள் விலகி விடும். பிறகு, தேனைப் பிழிந்தெடுக்க பிரத்யேகமாக தயாரி க்கப்பட்ட டிரம்மில் அடையை வைத்து, கைப்பிடியைச் சுற்றினால், தேன் வடிந்து டிரம்மில் சேகரமாகும்.
மூன்று ஆண்டுகளுக்குக் கெடாது !
அடையில் இருந்து சேகரித்த தேனை சூடுபடுத்தா விட்டால், இரண்டு மூன்று மாதங்களில் புளித்து விடும். அதனால், வாய் அகன்ற பாத்தி ரத்தில் தண்ணீரை வைத்து சூடாக்கி, அதனுள் சிறிய பாத்திரத்தில் தேனை ஊற்றி சூடாக்க வேண்டும். கொதிக்க வைத்த தேனில், மேல் பகுதியில் இருக்கும் நுரையை எடுத்துவிட்டு, சுத்தமான துணியில் வடிகட்டினால், இறந்துபோன தேனீக்கள், மெழுகு, பூ, இலை என தே வையில்லாதக் கழிவுகள் தங்கிவிடும். பிறகு, தேனை ஆறவைத்து… கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றலாம். இது 3 ஆண்டுகளுக்குக் கெட்டுப்போகாது. எக்காரணம் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் தேனை வைக்ககூடாது” என்றார், பரமா னந்தம்.

 மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் !

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப் புப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதைப் பற்றி பேசிய, பூச்சியியல் துறை பேராசிரியர் உமாபதி, ”தமிழ் நாட்டில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலையில் பல்வேறு விதமா ன பூக்கள் பூக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் தே னைச் சேகரிக்க… இந்தியத் தேனீ மற்றும் இத்தாலியத் தேனீ வளர்ப்பு ஆகியவை பற்றி பயிற்சிகள் கொடுக்கிறோம். மாதம் தோறும், 6-ம் தேதி இந்தப் பயிற்சி நடக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளி ல் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதற்கான கட்டணம் 150 ரூபாய்.
எழுதப்படிக்க தெரிந்தவர்களுக்கு, தொலைதூரக்கல்வி மூலம் தேனீ வளர்ப்பு’ பற்றி 6 மாத காலச் சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்ப டுகிறது. இதற்கு கட்டணம் 1,500 ரூபாய். விவசாயிகள் திருப்தி அ டையும் அளவுக்கு, தேனீ வளர்ப்பு முறைகள், பராமரிப்பு முறைகள், தேன் எடுக்கும் முறை… என்று அனைத்தையும் கற்றுக்கொடுக்கி றோம்”

மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

மல்லி கொடுக்கும் மகத்தான வருமானம்!

வேலை ஆட்கள் பற்றாக்குறை காரணமாக.. தென்னை, பாக்கு, மூங்கில் உள்ளிட்ட மரப்பயிர்கள் என தங்களுடைய விவசாயத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பலரும். இவர்களுக்கு நடுவே... தினசரி வருமானம் கொடுக்கும் காய்கறிகளை, விடாமல் பயிர் செய்யும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அருகேயுள்ள சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ், அவர்களில் ஒருவராக, ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார். தன்னுடைய வயலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜை சந்தித்த போது, அன்போடு வரவேற்று... ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தவர், எனக்கு மூன்று ஏக்கர் இருக்கு. மொத்தமும் செம்மண் பூமி என்பதால், போட்டது விளையும். பாசனம் கொஞ்சம் பற்றாக்குறைதான். ஆயிரம் அடிக்கு போர் வெல் போட்டும் ஆடு கறக்க .. பூனை குடிக்கும் கதையாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. வழக்கமாக மிளகாய், பொரியல் தட்டை, வெங்காயம், கீரை, காய்கறிதான் சாகுபடி செய்வோம். ஆனால் இவைகளை மூன்று ஏக்கர்  முழுவதும் பயிர் செய்ய முடியாது. காரணம்.. இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் பி.ஏ.பி (பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) தண்ணீர் கிடைக்கும். அப்போது மட்டும்தான் மூன்று ஏக்கரிலும் முழுவதும் வெள்ளாமை செய்ய முடியும்.

நஞ்சையான புஞ்சை!
வழக்கமாக என்னோட நஞ்சை நிலத்தில் மட்டும் கொத்தமல்லி கீரையை சாகுபடி செய்வேன். இந்த முறை மானாவாரி நிலத்தை குத்தகைக்கு பிடித்து, அதில் விதைத்திருக்கிறேன். என்னோட தோட்டத்திற்குப் பக்கத்தில் ஏக்கர் கணக்கில் காலி நிலங்கள் கிடக்கிறது. நல்ல மழை கிடைத்தால் மட்டும்தான் அதில் சோளம், கம்பு என்று எதையாவது விதைப்பாங்க. மற்றபடி, ஆடு மாடுகள்தான் மேய்ந்து கொண்டிருக்கும். அதனால் அதுகளோட எரு மொத்தமும் அந்த இடத்திலேயே மண்டி, நிலமும் வளமாக இருந்தது. அந்த மண்ணில் பாரம்பரிய விவசாய முறையில் கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம் என்று தோன்றவே.. இரண்டு ஏக்கரை குத்தகைக்குப் பிடித்து, என் தோட்டத்திலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் எடுத்துச் சென்று அதில்தான், இந்த முறை கொத்தமல்லி சாகுபடி செய்திருக்கிறேன். அரை, ஏக்கர் நிலத்தில்தான் கொத்தமல்லியை விதைப்பேன். ஒரு பக்கம் அறுவடை நடக்கும் போதே, அடுத்த அரை ஏக்கரில் கொத்தமல்லியை சாகுபடி செய்வதுதான் என்னோட பழக்கம். குத்தகை நிலத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறேன்.

கோழி எருவை மட்க வைத்துதான் கொட்டணும்!
கலப்பையே படாமல் இருந்த அந்த நிலத்தில் புழுதி கிளம்ப கோடை உழவு செய்து ஆறப்போட்டுத்தான் வெள்ளாமை செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் அரை ஏக்கர் நிலத்தை மட்டும் சரி செய்து, ஆரம்பித்தேன். நாட்டுக் கோழிப் பண்ணை வைத்திருக்கிறேன். அதிலிருந்து 5 டன் கோழி எருவையும் கொண்டு வந்து போட்டதில் பயிர் நன்றாக வந்திருக்கு. கோழி எரு போடும் போது கொஞ்சம் கவனமாக இருக்கணும். அதில், காரத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால், காற்றோட்டமான இடத்தில் குவியலாக கொட்டி வைத்து, 45 நாள் ஆன பிறகுதான் அதை வயலில் போட வேண்டும். இல்லையென்றால் பயிர்களோட வேரை அது பாதித்துவிடும்.

45 நாளில் வருமானம்
மணல் கலந்த செம்மண் பூமியில், கொத்தமல்லி அருமையாக விளையும். இதன் வயது 45 நாட்கள். நிலத்தை பொலபொலவென உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது, 5 டன் கோழி எருவை அடியுரமாக இட்டு, இரண்டு முறை உழ வேண்டும். பிறகு, இடவசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் சிறுசிறு மண்கட்டிகள், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மண்ணை சமன் செய்து விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைக்கும் போது ஓரிடத்தில் அதிகமாகவும் இன்னோரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், முளைப்பு சீராக இருக்காது. அதனால், கவனமாக விதைத்து, பாத்திகளில் உள்ள விதைகளை மண் மூடும்படி குச்சி கொண்டு கீறி, மண் நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
விதைத்த 3 –ம் நாளில் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. விதைத்த 8 – ம் நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். 20-ம் நாளில் களை எடுத்து, பயிர் வளர்ச்சி ஊக்கியாக 25 கிலோ தழை – மணி – சாம்பல் சத்துக் கொண்ட உரத்தை பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். ( இவர் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் உரத்தைப் பயனபடுத்துகிறார்.) 30 – ம் நாளில் செடிகள் ‘தளதள’வென  வளர்ந்து பச்சைக்கட்டி நிற்கும். அதன் வாசமும் நிறமும் பூச்சிகளை ஈர்க்கும். அசுவிணி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக வந்து செடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

உடனடி விற்பனை!
45 – ம் நாளில் செடிகள் பாத்தி தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் இதுதான் அறுவடை தருணம். அளவான ஈரத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி, இரண்டு கைப்பிடி அளவிற்கு வைத்து வாழை நார் கொண்டு கட்டுகளாககக் கட்டி வேர்ப்பகுதியை மட்டும் தண்ணீரில் அலசி, வேர்களில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
நிழலான இடத்தில் வரிசையாக கட்டுகளை அடுக்கி வைத்து, ஈரத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தழைகள் வாடி உதிர்ந்து போகாமல் இருக்கும். கொத்தமல்லி, விரைவில் வாடிப்போகும் என்பதால், அறுவடை செய்த உடனே விற்று விடுவது நல்லது.

அரை ஏக்கரில் 30 ஆயிரம்!
கொத்தமல்லியைப் பொறுத்த மட்டும் எப்பவும் கிராக்கி இருந்து கொண்டேயிருக்கும். அறுவடைக்கு நான்கு நாளைக்கு முன்பே வியாபாரிகள் வந்து பாத்திகளை கணக்குப் போட்டு முன்பணம் கொடுப்பாங்க. அதற்காக அவங்களை மட்டுமே நம்ப வேண்டியதில்லை. உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் என்று நாமாகவே நேரில் கொண்டு சென்றும் விற்கலாம். நான், இந்த அரை ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கம் என்று கணக்குப் போட்டு, கிலோ 12 ரூபாய் என்று விலை பேசி வியாபாரிகளிடம் விற்றுவிட்டேன். இதன் மூலமாக 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. மொத்த செலவு 12 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபம்.. அதுவும் 45 நாளில் என்று விற்பனை, வருமானம் மற்றும் லாபக் கணக்குகளைச் சொன்னார்.

தொடர்புக்கு 
கனகராஜ்
செல்போன் : 98427 - 07280

அதிக லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு

கிராமப்புற குளம், குட்டைகளில் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம். இதுதொடர்பாக மீன்வளத் துறையினர் அளித்துள்ள தகவல்கள்:
காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக இருக்கும்.
விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சிக் குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடலாம்.

மீன் வகைகள்: கெண்டை மீன்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் அதிவேக வளர்ச்சி பெறும் கெண்டை மீன்களைத் தேர்வு செய்து குளங்களில் வளர்த்தால் பெருமளவில் பயன் கிடைக்கும்.
தோப்பா கெண்டை, தம்பட கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை உள்ளிட்டவை குளங்களில் வளர்க்க ஏதுவான மீன்கள் ஆகும். இந்த மீன்களை குறிப்பிட்ட இன விகிதங்களின் படி ஒன்றாகக் கலந்து வளர்த்தால் நல்ல உற்பத்தித் திறனும் லாபமும் பெற முடியும். இவ்வாறு கூட்டாக வளர்ப்பதே கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பாகும்.

மீன்களின் தன்மை: ஒவ்வொரு வகை மீனும் தனித்தன்மையான உணவுப் பழக்கத்தைக் கொண்டது. கெண்டை மீன்களின் உணவு மாற்று விதிகத் திறன் அதிகம். இவை வேகமான வளர்ச்சித் திறன் உடையவை. பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் திறன் உடையவை.

சாதா கெண்டை: புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள்.
தோப்பா கெண்டை: விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.
தம்பட கெண்டை: விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.
புல் கெண்டை: நீர்த் தாவரங்களான ஹைடிரில்லா, வேலம்பாசி, வாத்துப் பாசி, புல். இவை தவிர அனைத்து மீன்களுக்கும் பொதுவான உணவாக மட்கிய பொருள்கள், தாவர, விலங்கின நுண்ணுயிர்கள், மிதவைகள், புழு, பூச்சிகள் ஆகியவை உள்ளன.

உணவுப் பொருள் உற்பத்தி: வளர்ப்பு மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களின் உற்பத்தியை இயற்கை உரம், செயற்கை உரமிடுதலின் மூலம் நாமே செய்யலாம். ஒரு ஹெக்டேர் நீர்ப் பரப்புள்ள குளத்துக்கு 10 ஆயிரம் கிலோ மாட்டுச் சாணம், 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைச் சேர்த்து அதில் 6-இல் ஒரு பகுதியை, மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு 10 நாள்கள் முன்னதாக இட வேண்டும். மீதமுள்ள உரத்தை 15 தினங்களுக்கு ஒரு முறை பகிர்ந்து இட வேண்டும். இதன்மூலம் குளத்தில் நுண்ணுயிர்கள் உற்பத்தியாகி மீன்களுக்கு உணவாகும்.
லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்பெறலாம்.