Thursday, July 7, 2016

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட


இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட

ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை  அதன் மேல் மஞ்சள் தூள் தூவி 
விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் 
வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் 
நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சுற்றுசூழலுக்கு எந்த கேடும் 
ஏற்படுத்தாது.

மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால்,
ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும்
இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், 
கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு 
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் பச்சை கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் 
இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகவும் சிறந்த கொசுக்களை அழிக்க வல்ல
பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி
டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில்
மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல்
ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் 
இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால்,
கொசுத் தொல்லை இருக்காது.

நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் 
புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு
ஓடிவிடும்.

விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் 
போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை
தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசு முட்டைகள் அழிந்து போய் விடுகிறதாம் மற்றும்
கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போகும்.

வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்று பச்சிலை செடியை  நட்டு வைக்க, கொசுக்கள் வருவது 
குறையும்.