Showing posts with label சின்ன வெங்காயம். Show all posts
Showing posts with label சின்ன வெங்காயம். Show all posts

Wednesday, March 2, 2016

சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி

சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி

கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி  சின்னவெங்காயத்தில் விதை உற்பத்தி பற்றி வெளியுட்டுள்ள அறிவிப்பு
  • கோ.ஆன்.5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
  • ஆராய்ச்சி முடிவின்படி அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றது. குறிப்பாக கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன.
  • விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது 80 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.
  • இந்த முறையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. ஆனால் நேரடியாக வெங்காயத்தை விதைக்கும் போது ஏக்கருக்கு 1 டன் வரை விதை தேவைப்படும்.
  • ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை விதைப்புக்காய்களாகவே செலவு பிடிக்கும்.
    ஆனால் விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 4,300 மட்டுமே ஆகும்.
  • காய்கறித்துறையில் சின்ன வெங்காயம் விதை விற்பனை செய்கிறார்கள். முன்பதிவு செய்து கொண்டால் விதை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.
தொடர்புக்கு தொலைபேசி- 04226611283
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.