Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Wednesday, March 2, 2016

நாவல் பழ சாகுபடி

நாவல் பழ சாகுபடி

“இன்றைய விவசாயிகளுக்கு தேவை நம்பிக்கையும் புதிய முயற்சியும்” என்கிறார்  மதுபாலன், அரசின் வேளாண்மை துறையின் உதவி இயக்கனர். இதற்கு ஒரு உதாரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாவல் சாகுபடி செய்யும் ஜெயகுமார் என்கிறார் அவர்.
Courtesy: Hindu
Courtesy: Hindu














ஜெயகுமார் 1.5 ஏகரில் நாவல் சாகுபடியும், மீதி 8.5 ஏகரில் நெல்லியும் சாகுபடி செய்துள்ளார். நாவல் மரங்கள் 30-35  அடி வரை வளர்ந்து 60-80 வருடம் வரை காய்க்கும்  திறன் கொண்டன.
ஜெயகுமார் இந்த மரங்களை முறையாக காவாத்து செய்து மரங்களின் உயரத்தை 18-20 அடி மட்டுமே வைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த மரங்கள் அதிக உயரம் வளர்ந்து பழங்களை பறிக்க பிரச்னையாகிறது என்கிறார். கிளைகளை உலுக்கி பழங்களை பறிக்க வேண்டும். ஆனால் நாவல் மரங்களின் கிளைகள் எளிதாக உடைவதால் மரம் பாழாகிறது. காவாத்து செய்து மரங்களின் உயரத்தை கட்டுப்பாடு செய்துள்ளார்.
அவர் 80 செடிகளை ஆந்திராவில் இருந்து வாங்கி 24×24 அடி இடத்தில நட்டு  உள்ளார்.சொட்டு நீர் பாசனம்.
நான்கு  ஆண்டுகள் பின் பழங்கள் ஒரு மரத்தில் இருந்து 2kg வந்தன. எட்டு வருடங்கள் கழித்து ஒரு மரத்தில் இருந்து 50kg பழங்கள் வந்தன.
அவர் இயற்கை உரங்கலான எலும்பு பொடி, கோழிவளர்ப்பு கழிவு, கரும்பு கழிவு, பஞ்சகவ்யா போன்றவற்றையே இடுகிறார்.
பழங்கள் தட்டுகளில் சேர்க்க பட்டு கடைகளுக்கு அனுப்ப  படுகின்றன. ஒரு கிலோ ரூ 150 மூலம் இந்த ஆண்டில் 80 மரங்களில் இருந்து 4250 கிலோ மூலம் இரண்டு மாதங்களில் ரூ 6 லட்சம் லாபம் கிடைக்கும் என்கிறார்.
இந்த மரங்களில் பூச்சி தாக்குதல் குறைவு செலவுகள் குறைவு என்கிறார்
இவரை தொடர்பு கொள்ள
C ஜெயக்குமார், நிலகோட்டை தாலுகா மேட்டூர் கேட் போஸ்ட், கோடை ரோடு, மொபைல்: 09865925193 ஈமெயில்:jkbiofarmdgl@gmail.com Mr. Madhu Balan on email : balmadhu@gmail.com, mobile: 09751506521

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia






சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.
நன்றி: தினமணி

நல்ல விலை போகும் நாவல்

நல்ல விலை போகும் நாவல்

திருப்புவனம் அருகே பூவந்தியில் ஆடி மாத சீசன் பழமான நாவல் பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. பூவந்தியில் இருந்து மேலூர் செல்லும் வழியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நாவல் பழ தோப்பு அமைந்துள்ளது. நாட்டு ரகத்தில் பழத்தின் அளவு சிறியதாக இருக்கும் ஆனால் ஒட்டு ரகத்தில் பழத்தின் அளவு பெரியதாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும் என்பதால் ஒட்டு ரகத்தையே அதிகளவு நடவு செய்துள்ளனர்.
சொட்டு நீர் பாசனம் மூலம் 24 மணி நேரமும் நாவல் பழ மரவேரில் தண்ணீர் விழும்படி செய்துள்ளனர்.
Courtesy: Dinakaran
Courtesy: Dinakaran




வீரிய ஒட்டு ரகம் என்பதால் மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் இருந்து பழம் பறிக்கலாம். பெங்களுரூவை பூர்வீகமாக கொண்ட ரகம் என்பதால் விளைச்சலும் சற்று அதிகமாகவும் பழத்தின் அளவும் பெரியதாகவும் இருக்கும்.
ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மூன்று மாதங்கள் சீசன் என்பதால் தற்போது பழங்கள் அதிகளவு விளைச்சல் உள்ளது. பூவந்தியில் 50 ஏக்கர் பரப்பளவில் 100 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு மரத்தில் இருந்து தினசரி 5 கிலோ முதல் 8 கிலோ வரை பறிக்கலாம். சீசன் நெருங்க நெருங்க பழத்தின் அளவு அதிகரிக்கும்.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பூவந்தியில் வந்து நாவல் பழம் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யார் வந்தாலும் கிலோ ரூ.120 என விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் 120 ரூபாய்க்கு வாங்கி சென்று கிலோ ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர்.
நன்றி: தினகரன்