நாவல் பழ சாகுபடி
“இன்றைய விவசாயிகளுக்கு தேவை நம்பிக்கையும் புதிய முயற்சியும்” என்கிறார் மதுபாலன், அரசின் வேளாண்மை துறையின் உதவி இயக்கனர். இதற்கு ஒரு உதாரணம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாவல் சாகுபடி செய்யும் ஜெயகுமார் என்கிறார் அவர்.
ஜெயகுமார் 1.5 ஏகரில் நாவல் சாகுபடியும், மீதி 8.5 ஏகரில் நெல்லியும் சாகுபடி செய்துள்ளார். நாவல் மரங்கள் 30-35 அடி வரை வளர்ந்து 60-80 வருடம் வரை காய்க்கும் திறன் கொண்டன.
ஜெயகுமார் இந்த மரங்களை முறையாக காவாத்து செய்து மரங்களின் உயரத்தை 18-20 அடி மட்டுமே வைத்துள்ளார். இல்லாவிட்டால் இந்த மரங்கள் அதிக உயரம் வளர்ந்து பழங்களை பறிக்க பிரச்னையாகிறது என்கிறார். கிளைகளை உலுக்கி பழங்களை பறிக்க வேண்டும். ஆனால் நாவல் மரங்களின் கிளைகள் எளிதாக உடைவதால் மரம் பாழாகிறது. காவாத்து செய்து மரங்களின் உயரத்தை கட்டுப்பாடு செய்துள்ளார்.
அவர் 80 செடிகளை ஆந்திராவில் இருந்து வாங்கி 24×24 அடி இடத்தில நட்டு உள்ளார்.சொட்டு நீர் பாசனம்.
நான்கு ஆண்டுகள் பின் பழங்கள் ஒரு மரத்தில் இருந்து 2kg வந்தன. எட்டு வருடங்கள் கழித்து ஒரு மரத்தில் இருந்து 50kg பழங்கள் வந்தன.
நான்கு ஆண்டுகள் பின் பழங்கள் ஒரு மரத்தில் இருந்து 2kg வந்தன. எட்டு வருடங்கள் கழித்து ஒரு மரத்தில் இருந்து 50kg பழங்கள் வந்தன.
அவர் இயற்கை உரங்கலான எலும்பு பொடி, கோழிவளர்ப்பு கழிவு, கரும்பு கழிவு, பஞ்சகவ்யா போன்றவற்றையே இடுகிறார்.
பழங்கள் தட்டுகளில் சேர்க்க பட்டு கடைகளுக்கு அனுப்ப படுகின்றன. ஒரு கிலோ ரூ 150 மூலம் இந்த ஆண்டில் 80 மரங்களில் இருந்து 4250 கிலோ மூலம் இரண்டு மாதங்களில் ரூ 6 லட்சம் லாபம் கிடைக்கும் என்கிறார்.
இந்த மரங்களில் பூச்சி தாக்குதல் குறைவு செலவுகள் குறைவு என்கிறார்
இவரை தொடர்பு கொள்ள
C ஜெயக்குமார், நிலகோட்டை தாலுகா மேட்டூர் கேட் போஸ்ட், கோடை ரோடு, மொபைல்: 09865925193 ஈமெயில்:jkbiofarmdgl@gmail.com Mr. Madhu Balan on email : balmadhu@gmail.com, mobile: 09751506521
நன்றி: ஹிந்து (ஆங்கிலம்)
No comments:
Post a Comment