Showing posts with label மூங்கில் சாகுபடி. Show all posts
Showing posts with label மூங்கில் சாகுபடி. Show all posts

Wednesday, March 2, 2016

மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்


மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்


“ஓராண்டில் ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம்” என, மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் சகாயம் துவக்கி வைத்து பேசியதாவது:
விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு, மாற்று விவசாயத்தை சிந்திக்க வேண்டும். மதுரையில் இந்த ஆண்டு 25 எக்டேர் நிலத்தில் மூங்கில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளைபொருளை நகரத்தில் உள்ள வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதைவிட, நேரடியாக மதிப்புக் கூட்டு பொருளாக விற்றால் பலமடங்கு லாபம் கிடைக்கும். இதற்கு “நபார்டு’ மூலம் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன் பேசியதாவது:
  • புல்வகையை சேர்ந்த மூங்கில், 47 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை பெற்று, 35 சதவீத ஆக்சிஜனை வெளியிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
  • ஒரு ஏக்கரில் 30 டன்வரை சருகுகளை உதிர்ப்பதால், அவை மக்கி இயற்கை உரமாக மாறி மண்வளம் பெருகுகிறது.
  • ஒரு ஏக்கரில் 2 ஆயிரம் மூங்கில் சாகுபடி செய்தால் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கும்.
  • பவர் பிளான்ட், கைவினை பொருள், காகிதம், கட்டுமான வேலைக்கு மூங்கில் தேவை.
  • மூங்கில் குருத்தில் இருந்து ஊறுகாய், பொரியல், கேசரி, மிட்டாய், அல்வா, இட்லி பொடி தயாரிக்கலாம்.
  • இதன் தேவை அதிகம் என்பதால் பிறமாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர்.நாமே பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்.
  • இதுதொடர்பாக 09486408384  என்ற எண்ணில் விபரம் பெறலாம், என்றார்.
நன்றி: தினமலர்

முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

உடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்கில்சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது.
ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு வழி உள்ளது.
விவசாயிகள் தனது சொந்த செலவில் கன்றுகளைப் பெற்று வாங்கி நட்டு அதன் புகைப்படம், சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு மற்றும் விண்ணப்பம் தந்து மூங்கில் சாகுபடி மானியம் பெற டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை, அவர் தெரிவித்துள்ளார்.
நட்ட 3ம் ஆண்டு முதல் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு ஏக்கரில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தரமான மூங்கில் வளர்த்து அறுவடை செய்து உயர்நிலை அடையலாம்.
மூங்கில் கன்றுகள் குறித்து மேலும் விவரம் பெற 09842007125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்