Showing posts with label எலுமிச்சை. Show all posts
Showing posts with label எலுமிச்சை. Show all posts

Wednesday, March 2, 2016

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.
இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.
சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.
இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.
இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.
அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம்.
  • எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம்.
  • தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
  • சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
  • மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும்.
  • நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
  • மேலும் இதுதொடர்பான தொழில் நுட்பங்கள் தேவையெனில் தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர், தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்

சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி

சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி

விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று பலர் முடிவு எடுக்கும் இந்நாளில், சிறிய அளவில்  வைத்து கொண்டு லாபம் பெற முடியும் என்று நிருபித்து உள்ளார் தர்மபுரி சேர்ந்த முது என்ற விவசாயி. இவரின் வெற்றி ரகசியத்தை பார்ப்போமா?
இவருக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதில், எலுமிச்சை மற்றும் மல்லிகை சாகுபடி செய்கிறார். நேரம் பார்த்து சாகுபடி செய்கிறார். எல்லோரும் போல் இல்லாமல் சரியான பயிரையும் நேரத்திலும் செய்கிறார்.
25 எலுமிச்சை மரங்கள் கோடையில் காவாத்து செய்தால், கோடையில் நல்ல மகசூல் கிடைக்கிறது. திரட்சியான நல்ல நிறம் கொண்ட இந்த எலுமிச்சை பெற அவர் மீன் அமிலத்தை பயன் படுதிகிறார்.
ஒரு மரத்தில் இருந்து 5000 எலுமிச்சை வரி கிடைக்கிறது. ஒன்று ரூ 1.5 விலை போகிறது. சீசனில் மல்லிகை நல்ல விலை ரூ 300/கிலோ வரை போகிறது
இதை தவிர எலுமிச்சை பயிருக்கு ஊடு பயிராக இயற்கை விவசாயம் மூலம் நிலகடலை பயிர் இட்டு  10   மூட்டை கடலை ஒரு மூட்டை ரூ 3000 வரை  கிடைக்கிறது
இவற்றால், இவருக்கு வருடம் ரூ 4 லட்சம் வருமானம்
கிடைக்கிறது
இவரின் வெற்றி ரகசியங்கள்:

  • இயற்கை ஊடு பொருட்கள். இவரிடம் இருக்கும் 5 ஆடு, 5 மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை எரு மட்டுமே பயன் படுத்துவதால், செலவு குறைகிறது
  • எந்த நேரத்தில் எந்த பயிர்க்கு நல்ல மவுசு இருக்கிறது என்று தெரிந்து பயிர் இடுதல்
  • இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சாகுபடிக்கு கிடைக்கும் நல்ல விலை.
  • ஒரே பயிரை பயிர் இடாமல் பல பயிர்களை வருடம் முழுவதும் சுழற்சி முறையில் பயிர் இடுவது
முத்துவின் இயற்கை விவசாயம்
  • 10 கிலோ மீன் அழுகலை 10 லிட்டர் புளித்த மோரில் சேர்த்து 15 நாட்கள் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கவும். அவ்வபோது இதை கலக்கி விடவும். இதை பில்ட்டர் செய்து sprayer மூலம் பயிர்கள் மேல் தெளித்தால் நல்ல திரட்சியான எலுமிச்சை, கடலை கிடைக்கும்
  • வேம்பு புங்கன் நொச்சி போன்ற இலைகளை எடுத்து கசக்கி 10 லிட்டர் கோ கோ மூத்திரம் சேர்த்து புளித்த மோரை சேர்க்கவும். இந்த கலவை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் 20 நாள் வைத்து இயற்க்கை பூச்சி விரட்டியாக பயன் படுத்தலாம்
இவர் facebook இனைய தலத்தில் விவசாயம் கறக்கலாம் Vivasayam karkalam என்று ஆரம்பித்து 1000 பேர் இவரை follow செய்கின்றனர்
இவரை தொடர்பு கொள்ள
திரு N K P முத்து நகதசம்பட்டி, பென்னாகரம் தாலுகா தருமபுரி மாவட்டம் அலைபேசி எண்: 09344469645

எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்


எலுமிச்சையில் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்


திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில்எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் “ராஜமுந்திரி’ என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள குழிகள் தோண்டி அதில் குப்பையை கொட்டி கன்றுகளை நட்டார். ஒவ்வொரு கன்றும் 20 க்கு 20 அடி இடைவெளியில் நடப்பட்டது. ஒரு ஏக்கரில் 100 கன்றுகளை நட்டார். இயற்கை விவசாய முறையில் உரமிட்டு வருகிறார்.
Courtesy: Dinamalar

செடிகள் நட்டு 4 ஆண்டுகளுக்கு பின் காய்க்க துவங்கியது. ஒரு மரத்தில் 100 காய்களுக்கு குறையாமல் காய்க்கின்றன. ஒவ்வொரு பழமும் குறைந்தது 80 கிராம் வரை உள்ளது. சில பழங்கள் 120 கிராம் வரை உள்ளன (சாதாரணமாக 60 கிராம்). தலா ஒரு மாத இடைவெளியில் ஆண்டுக்கு 3 முறை காய்க்கின்றன. ஒவ்வொரு முறையும் 12 வாரங்கள் வரை தொடர்ந்து காய்களை பறிக்கின்றனர். வாரத்திற்கு 400 கிலோ காய்கள் கிடைக்கின்றன. குறைந்தது ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.
அவர் கூறியதாவது: எலுமிச்சை செடிகளுக்கு கால்நடைகளின் எரு, கழிவு, குப்பையை உரமாக இடுகிறோம். பசுந்தாள் உரங்களும் பயன்படுத்துகிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுகிறோம். நாட்டுரகம் என்பதால் 80 ஆண்டுகள்
வரை காய்க்கும். செடிகளை முறையாக கவாத்து செய்து பராமரிக்கிறோம். இதனால் காய்கள் பறிப்பதில் சிரமம் இல்லை என்றார். தொடர்புக்கு 09791500783