சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி
கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி சின்னவெங்காயத்தில் விதை உற்பத்தி பற்றி வெளியுட்டுள்ள அறிவிப்பு
- கோ.ஆன்.5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
- ஆராய்ச்சி முடிவின்படி அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றது. குறிப்பாக கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன.
- விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது 80 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.
- இந்த முறையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை போதுமானது. ஆனால் நேரடியாக வெங்காயத்தை விதைக்கும் போது ஏக்கருக்கு 1 டன் வரை விதை தேவைப்படும்.
- ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை விதைப்புக்காய்களாகவே செலவு பிடிக்கும்.
ஆனால் விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 4,300 மட்டுமே ஆகும். - காய்கறித்துறையில் சின்ன வெங்காயம் விதை விற்பனை செய்கிறார்கள். முன்பதிவு செய்து கொண்டால் விதை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள்.
தொடர்புக்கு தொலைபேசி- 04226611283
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
No comments:
Post a Comment