Tuesday, June 23, 2015

Natural fridge without electricity

காய்கறிகளை சேமித்து வைக்க, ‘நேச்சுரல் ஃப்ரிட்ஜ்

”ஹைதராபாத்தில் ‘கிரிடா’ என அழைக்கப்படும் ‘சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேன்ட் அக்ரிகல்ச்சர்’ (CRIDA-Central Research Institute for Dryland Agriculture) என்ற பெயரில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்கும் வகையில், இயற்கை முறை சேமிப்புக் கலனை இந்நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. ‘கிரிடா சேமிப்புக் கலன்’ என்றே அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பார்வைக்கு, தொட்டி போல காட்சி அளிக்கும். இதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் வைக்கோல் வைக்கப்பட்டிருக்கும். வைக்கோல் மீது, தண்ணீரைத் தெளித்தால், கலனுக்குள் குளுமையாக இருக்கும். இக்கலனில் எட்டு நாட்கள் வரை காய்கறிகள் வாடாமல் இருக்கும். இதற்கு மின்சாரம் போன்ற எந்த சக்தியும் தேவையில்லை என்பதால்… பள்ளி, கல்லூரி விடுதிகள், உணவகங்கள்… என பலவற்றிலும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால், இதன் தேவை அதிகரித்துள்ளது.

15 கிலோ, 30 கிலோ மற்றும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட கலன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கொள்ளளவுத் திறனுக்குத் தகுந்தபடி, 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாடு முழுதும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு இந்தக் கலன்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04342-245860.

I think we can also build this fridge using mother earth sand and place straws in between the spaces

No comments:

Post a Comment