Friday, August 21, 2015

வாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai

வாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai

பூமி தோன்றி முப்பத்து ஆறாயிரம் கோடி வருடங்கள் முடிந்தது. பூமியில் மனிதன் தோன்றி முப்பத்தைந்தாயிரம் கோடி வருடங்கள் முடிந்தது. இதுவரை பூமியில் ஏற்;பட்டுள்ள சாபங்கள் அணைத்தும் அப்படியே தான் உள்ளது. பூமியில் தற்போது கடைசியுகம் என்பதால் சாபங்கள் அணைத்தையும் தீர்ப்பதற்காகவே இந்த 64வது அவதாரமாக பிறந்து உள்ளேன்.
உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் இறைவனிடம் தோன்றிய பல கோடி ஆன்மாக்களும் இறைவனிடமே சென்று அடைவதற்காகவே நான் இங்கு அவதரித்து உள்ளேன்.
பாண்டிய மன்னர் வம்சத்தில் மதுரை, கருப்பாயூரணியில் பாலுச்சாமி – பிச்சையம்மாளுக்கு ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்தவர். சுவாமியின் இயற்பெயர் ஸ்ரீசௌந்தரபாண்டி. தனது ஏழாவது வயதிலேயே ஆண்மீக தேடலை நோக்கி வீரபாஞ்சான் இடம் பெயர்ந்தார். ஏழாவது வயது வரை பள்ளியில் பயின்று ஆண்மீக நாட்டத்தினால் கல்வியை துறந்தார். தனது பத்து வயது முதல் தவத்தை மேற்கொண்டார். பதினொறு வயதிலேயே இறைவனை நேரில் பார்த்து ஞானம் பெற்றார்.
தனது பதினாறாவது வயதில் திருவண்ணாமலையிலுள்ள மலை உச்சியில் ஒரு வருட காலம் தவத்தை மேற்கொண்டார். பதினேழாவது வயதில் அழகர்மலை உச்சியில் ஒரு வருடகாலம் தவத்தை மேற்கொண்டு மருத்துவம் தொடர்பான அணைத்து மூலிகைகளையும் பற்றி அறிந்தார்.
சரியாக இரண்டாயிரம் வருடம் வந்த உடன் உலகம் அழிய இருந்தது. இறைவன் உத்தரவுபடி சுவாமி அவர்கள் மதுரை, வீரபாஞ்சானில் 1999 முதல் ஆடி பதினெட்டாம் தேதி முதல் பனிரெண்டு வருடம் மௌன விரதத்தை தொடங்கினார். 2012ல் மௌன விரதத்தை முடித்தார் அதனால் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது.
2012ல் மௌன விரதத்தை முடித்த பிறகு அணைத்து இண மக்களுக்கும் அவர்களுடைய துன்பத்தையும், நோய்களையும் தீர்த்து மக்களை காப்பாற்றி வருகிறார்.
ஆண்மீக தேடல் உள்ளவர்களுக்கு யோகம், தியாணம், மெஞ்ஞானத்தை போதித்து வருகிறார். சித்த மருத்துவத்தின் மூலம் அணைத்து விதமான நோய்களையும் நிவர்த்தி செய்து தன்னலமற்ற சேவையை செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment