Tuesday, September 20, 2016

வெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்

வெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்



வெட்டிவேர்
வெட்டிவேர்
தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.
இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி என்று வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல் பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயி ரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக் கொள்ள தயாராக உள்ளார்கள். செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம்.
மேலே உள்ள பச்சை இலைகள் மாட்டுத்தீவனம். பன்னிரெண்டு மாதங்களில் இருந்து பதினான்கு மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிடவேண்டியதுதான்.
முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். ரசாயன உரம் தேவையில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.
பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.
நாங்கள் எங்கள் நிலத்தில் போன வருடம் ஒரு ஏக்கரில் சோதனை முறையில் வெட்டிவேர் பயிரிட்டு பார்த்தோம். எங்கள் நிலம் காரத்தன்மை அதிகம் கொண்ட களிமண் நிலம். களிமண்ணின் கெட்டித் தன்மையைப் போக்குவதுதான் நாங்கள் பயிரிட்டதன் முக்கிய நோக்கம். எங்கள் நோக்கம் சரிவர நிறைவேறிவிட்டது.
மண்புழு செய்யும் வேலையை ஒவ்வொரு வெட்டிவேர் செடியும் செய்துவிட்டது. இந்த வருடம் பயிரிடும்போது கண்டிப்பாக போன வருடத்தைவிட அதிக மகசூல் கிடைக்கும். காரணம் நிலம் கடினத்தன்மை போய் காற்றோட்டம் உள்ளதாகிவிட்டது. அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.
மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு பதிமூன்றாம் மாதத்தில் அறுவடைதான்.
தொடர்புக்கு:
கே.சத்தியபிரபா, 4/164, எஸ்.எஸ்.காலனி, உடுமலை.
ஆர்.ராஜலட்சுமி, மொபைல்: 93810 78770.

மீனுக்கு அமுதக்கரைசல்

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்


ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் கட்டுரைகளை ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். இது இன்னொன்று.
பத்து ஏக்கர்… இருபது ஏக்கர் என்று இருந்தாத்தான் வருமானம் பார்க்க முடியும்கறதில்ல. முறையா திட்டமிட்டா… மூணரை ஏக்கர்ல இருந்தே முத்தான வருமானத்தைப் பாக்கலாம். என்னோட பண்ணையே அதுக்கு சரியான உதாரணம்” என்று தெம்போடு சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்.
இரண்டு ஏக்கரில் நெல், உளுந்து, எள் சாகுபடி; அரை ஏக்கரில் மீன்குளம் கரையில் வாழை, தென்னை, தேக்கு, தீவனப்புல், பரங்கி, கீரை, காய்கறி நாற்றுகள்; இன்னொரு அரை ஏக்கரில் நெல்லியும் அதற்கு ஊடுபயிராக கீரை, வெண்டை, மிளகாய், கத்திரி, உளுந்து என ஜீரோ பட்ஜெட் முறையில் அசத்தலாக சாகுபடி செய்து வருகிறார் மகாலிங்கம்!
”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி. இங்க இயற்கை இடுபொருட்களைக்கூட அதிகம் பயன்படுத்துறதில்ல. ஆனாலும், வளர்ச்சி அபாரமா இருக்கு. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதலே ஏற்படல.
சாணத்துக்காகவும், பாலுக்காகவும் ரெண்டு எருமைகள வெச்சிருக்கேன். இப்போதைக்கு வாழை, கீரை, காய்கறிகள், நெல், உளுந்து, மீன், பால் மூலமா வருமானம் வந்துக்கிட்டு இருக்கு. நெல்லியும், மாவும் இப்பத்தான் காய்ப்புக்கு வந்திருக்கு. தென்னை இனிமேதான் காய்ப்புக்கு வரும். ஆனா, எல்லாமே நல்ல வளர்ச்சியில இருக்கு” என்று மகிழ்ச்சியோடு சொன்ன மகாலிங்கம், தொடர்ந்தார்.
”மூணு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நெல்லையும், கரும்பையும் ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தி புரிஞ்சது. உடனே, ‘இந்த மூணரை ஏக்கர் நிலத்தையும் ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணையமா மாத்தணும்’னு முடிவெடுத்தேன். இதைச் சொன்னதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ‘ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்தலைனா… தோட்டக்கலைப் பயிர்கள் தாக்குப் பிடிக்காது. குறிப்பா, நெல்லிக்கு அது ரெண்டும் அவசியம்’னு சொன்னாங்க.
நான் அதுக்கெல்லாம் அசராம, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். ரெண்டு ஏக்கர்ல சுழற்சி முறையில சீரகச் சம்பா, உளுந்து, எள், அதிசயப் பொன்னினு சாகுபடி செய்றேன். அரை ஏக்கர்ல நெல்லியை நட்டு, இடையில காய்கறிகளையும், இன்னொரு அரை ஏக்கர்ல மீன்குளம் வெட்டி, மீனையும், குளத்தோட கரையில தென்னை, வாழை, தேக்கு, தீவனப்புல், கீரை, உளுந்து, காய்கறி நாத்துகளையும் உற்பத்தி செய்றேன்” என்றவர், ஒருங்கிணைந்தப் பண்ணையத்துக்கான சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

நெல், உளுந்து, எள்!

சீரகச் சம்பா ரகம் 120 நாள் வயது கொண்ட பயிர். இதைச் சம்பா பருவத்தில், அதாவது, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடவு செய்யலாம். இரண்டு சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் தொழுவுரம், அரை டன் சாம்பல் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்டி, சீரகச் சம்பா நாற்றுகளை சாதாரண முறையில் நடவு செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனத் தண்ணீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 120-ம் நாளில் நெல் அறுவடைக்கு வரும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து விதைகளை வயலில் தெளிக்கவேண்டும். நெல் அறுவடை முடிந்த 70 நாட்களில், அதாவது மார்ச் மாதக் கடைசியில் உளுந்து அறுவடை செய்யலாம்.
அதன் பிறகு, நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு இரண்டு கிலோ எள் விதையைத் தெளிக்க வேண்டும். விதைத்ததில் இருந்து 80-ம் நாள் எள் அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கோடை சாகுபடி போல அதிசயப் பொன்னியை விதைக்கலாம். சீரகச் சம்பா நெல்லுக்கு செய்தது போலவே இதற்கும் நிலத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புகளையும் செய்ய வேண்டும். இதன் அறுவடை முடிந்த உடனே, மறுபடியும் சீரகச் சம்பாவுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் செய்துகொண்டே இருக்கலாம்.

நெல்லியும்… ஊடுபயிர்களும்!

நான்கு சால் உழவு ஓட்டி, மண்ணை, பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு போட்டு, நெல்லிக் கன்றை நடவு செய்து, உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும் (இவர் அரை ஏக்கரில் 100 கன்றுகளை நடவு செய்துள்ளார்). ஒரு மாதம் வரை 3 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு… காய்ச்சலுக்கு ஏற்ப 10 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். ஆண்டுக்கொரு முறை கவாத்து செய்ய வேண்டும். நடவு செய்த மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கும்போது மகசூல் கிடைக்கும். படிப்படியாக அதிகரித்து, ஆறாவது ஆண்டு முதல் மரத்துக்கு 100 கிலோ வரை கிடைக்கும். (இவர் நெல்லி கன்றுகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு முதல்தான் காய்ப்புக்கு வரும்).
இரண்டு நெல்லி வரிசைக்கு இடையில், 9 அடி அகலம், ஒன்றரையடி உயரம், 50 அடி நீளத்தில் பாத்திகளை அமைத்து, ஒவ்வொரு பாத்தியிலும் கீரை, காய்கறி போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம். இப்படித் திட்டமிட்டுப் பயிர் செய்தால், வேலையாட்களை அதிகமாக எதிர்பார்க்கத் தேவையில்லை. விற்பனையிலும் சிரமம் இருக்காது.

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

தென்னை கரையானை அரிக்கும் உப்பு!

குளக்கரையின் வெளி விளிம்பில் 10 அடி இடைவெளியில், மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து வரிசையாக தென்னங்கன்று நடவேண்டும். இவற்றைக் கரையான் அரிக்காமல் தடுக்க, நடவுக்கு முன்பாக ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் சாதாரண கல்உப்பு, குளத்துமண் ஆகியவற்றைப் போட்டு, தென்னங்கன்றுகளை நடவேண்டும். உடனடியாக உயிர்த் தண்ணீர் தர வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். தென்னைக்கு இடையிலும், ஒரு அடி தள்ளியும் வரிசையாக தீவனப்புல்லை நடவு செய்யலாம். இதன் மூலம் இரண்டு மாடுகளுக்கு போதுமான பசுந்தீவனம் கிடைக்கும்.

வாழைக்கு இடையில் தேக்கு!

குளத்துக் கரையின் உள் விளிம்பில் 10 அடி இடைவெளியில் வரிசையாக ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, வாழையை நடவு செய்யலாம். அரை ஏக்கர் குளத்தின் கரையில் 100 கன்றுகள் வரை நடலாம். வாழை இலைகளை அவ்வப்போது, நறுக்கி குளத்தில் போட்டால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இரண்டு வாழைக்கு இடையில் அரை அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒரு தேக்குக் கன்றை நடவேண்டும். கரையின் நடுப்பகுதியில 10 அடிக்கு 10 அடியில் பாத்திகளை அமைத்து அதில் கீரை விதைக்கலாம். மிளகாய், கத்திரி நாற்றுகளை சொந்தத் தேவைக்கு உற்பத்தி செய்யலாம்.
மழைக் காலங்களில் கரையில் காய்கறி நாற்று உற்பத்தி செய்யமுடியாது. அப்போது கரை முழுவதும் காலியாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் உளுந்து விதையை ஊன்றிவிட வேண்டும். இதைத் தவிர, கரையின் ஏதாவது இரண்டு மூலைகளில் ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரத்தைப் போட்டு, மண்ணால் நிரப்பி, குழிக்கு மூன்று பரங்கி விதைகளை ஊன்றினால்… குறைந்தபட்சம் 50 காய்கள் கிடைக்கும்.’

இரண்டு ஏக்கரில் 1,80,000

சாகுபடி பாடம் முடித்த மகாலிங்கம், வரும்படி பற்றி பேசத் தொடங்கினார்.
”நெல்லுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கறதால முளைப்புத் திறன் நல்லா இருக்கு. ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 3,600 கிலோ சீரகச் சம்பா நெல்லு, கிடைக்குது. இதுல 2,000 கிலோ நெல்லை விதைநெல்லா விற்பனை செய்றேன். கிலோ 50 ரூபாய்னு விக்கிறது மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்குது. மீதியுள்ள நெல்லை சொந்தத் தேவைக்காக வெச்சுக்குறேன். இதோட மதிப்பு 17 ஆயிரம் ரூபாய். அதிசயப் பொன்னி
3,600 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 11 ரூபாய் வீதம் விலைக்குக் கொடுக்கிறேன். இதுல 39,600 ரூபாய் கிடைக்கும்.
உளுந்து 300 கிலோ கிடைக்கும். அதை விதைக்காக வேளாண்துறையிலயே கிலோ 56 ரூபாய்னு வாங்கிக்கறாங்க. இதன் மூலமா 16,800 ரூபாய் கிடைக்கும். எள் 300 கிலோ கிடைக்கும். இதுல 200 கிலோ எள்ளை 40 ரூபாய்னு வித்துடுவேன். இதன் மூலமா 8,000 ரூபாய் கிடைக்கும். மீதி 100 கிலோ எள்ளை எண்ணெயா ஆட்டுவேன். 60 லிட்டர் எண்ணெயும்,
40 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். எண்ணெயை வீட்டுத் தேவைக்கும், புண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவேன்.
ஆக, மொத்தத்துல ரெண்டு ஏக்கர்ல நெல், உளுந்து, எள் மூலமா வருஷத்துக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.

ஊடுபயிர் மூலம் 10,000

நெல்லி இந்த வருஷம்தான் மகசூல் கொடுக்கும். ஆனா, அதுக்கு இடையில இருக்கற ஊடுபயிர் மூலமா முன்கூட்டியே வருமானம் கிடைக்கும். காய்கறி 6,500 ரூபாய், கீரை 1,500 ரூபாய், உளுந்து 2,000 ரூபாய்னு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.

அரை ஏக்கரில் 60,000

அரை ஏக்கர் குளத்துல, ஆறு மாசத்துல 500 கிலோ மீன் கிடைக்கும். கிலோ நூறு ரூபாய்னு விற்பனை செய்றேன். இப்படி வருஷத்துக்கு ரெண்டு தடவை விற்பனை செய்றதன் மூலமா 1 லட்ச ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவும் போக, 60 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.
குளக்கரை சாகுபடியைப் பொறுத்தவரை, உளுந்து 2,000 ரூபாய், பரங்கிக்காய் 3,000 ரூபாய், வாழை (நூறு தார்கள்) 7,500 ரூபாய்னு கிடைக்கும். ஆக, மீன் குளம், அதோட கரைனு மொத்தமா பார்த்தா… 1,12,500 ரூபாய் வருமானமா கிடைக்கும்

பால் 45,000

ரெண்டு எருமை மூலமா வருஷம் முழுக்க  சராசரியா 7 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 20 ரூபாய்னு விற்பனை பண்றேன். தினமும் ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ நெல் தவிடு, கால் கிலோ எள்ளுப் புண்ணாக்கு, அரை கிலோ கோதுமை தவிடும் கலந்து அடர்தீவனமா கொடுக்குறேன். கோதுமைத் தவிடை மட்டுந்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறேன். ரெண்டு எருமைக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு
15 ரூபாய்தான் செலவாகுது. ஒரு வருஷத்துல பால் மூலமா மட்டுமே 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்” என்று விலாவாரியாகச் சொன்னவர்,

”நெல்லி வருமானம் இந்த வருஷம்தான் வர ஆரம்பிக்கும். மரத்துக்கு 100 கிலோ வீதம்,

100 மரத்துக்கு 10 ஆயிரம் கிலோ நெல்லி கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சாலும்… மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.
படங்கள்:ந. வசந்தகுமார்
தொடர்புக்கு மகாலிங்கம்,
அலைபேசி: 93457-12260.
காப்புரிமை : Pasumai Vikatan

Reference:


சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு


மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.
45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி
25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’

Thursday, July 7, 2016

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட


இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட

ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை  அதன் மேல் மஞ்சள் தூள் தூவி 
விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் 
வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் 
நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சுற்றுசூழலுக்கு எந்த கேடும் 
ஏற்படுத்தாது.

மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால்,
ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும்
இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், 
கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு 
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் பச்சை கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் 
இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் இந்த இரண்டுமே மிகவும் சிறந்த கொசுக்களை அழிக்க வல்ல
பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி
டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில்
மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல்
ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் 
இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால்,
கொசுத் தொல்லை இருக்காது.

நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் 
புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு
ஓடிவிடும்.

விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் 
போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் சிறிதளவு மண்ணெண்ணையை
தெளித்து வைத்தால் அந்த இடத்தில் கொசு முட்டைகள் அழிந்து போய் விடுகிறதாம் மற்றும்
கொசுக்கள் முட்டையிடுவது அடியோடு நின்று போகும்.

வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்று பச்சிலை செடியை  நட்டு வைக்க, கொசுக்கள் வருவது 
குறையும்.

Monday, June 27, 2016

உப்பு தப்பு - உப்பிட்டவரே விஷமிட்டவராவார்


உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி!


‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’
-இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு அது மட்டுமின்றி . நாம் பெரும்பாலும் போரான விஷயங்களைக் பேசும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். 
‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! 
உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து  பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். இதற்கிடையில் ஒரு நாளைக்கு 
ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு  மட்டுமே தேவை. ஆனால், ஒவ்வொருவரும்  அதைவிட எக்க்சக்கமாகத்தான்  உப்பை மட்டும் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.  இப்படி  அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது ஆறறிவு மனித இனம். உண்மையில் உப்பு உணவு  பொருளே அல்ல, இது இரும்பையும் அரிக்கும் ரசாயனப் பொருள், உடலுக்கு அந்நியப் பொருள். 
அதனால் உடலுக்கு தேவையற்ற பொருள் உப்பு.  மனிதனின்  உடலையும் உள்ளத்தையும்  பாடாய்ப்படுத்துகிறது.  அதனால் இனி உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி 
புழக்கத்தில் வந்தாலும் ஆச்சரியமில்லை!




ஒட்டு மொத்த விலங்கினமும், அதனதன் உடலமைப்புக்கும், உறுப்புக்களின் அமைப்புக்கும்  பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டுமே பரம்பரையாக உண்டு வாழ்கின்றன.  அதனால் அவற்றுக்கு கொஞ்சம் கூட உப்பு தேவைப்படவில்லை. அதனால் அவை தமது உணவுடன் இந்த 
உப்பை கலக்காமல் நேரடியாக உண்டு ஆரோக்கியமாக வாழ முடிகிறது. இப்படி இயற்கையாக  உண்பதால் இயற்கையாக வாழவும் முடிகிறது இது போல் மனித இனமும் அப்படி இயற்கையாக  உண்ணவும், இயற்கையாக வாழவும் முடியும்.


உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது தவறு!

எத்தனையோ பண்டங்களை உப்பு சேர்த்து வேக வைக்காமல் நேரடியாகவே உண்டு வாழ முடிகிறது.  அவையெல்லாம் மனித உடலுக்கு பொருத்தமான உணவு பண்டங்கள் ஆகும். எனவே தக்க உணவுக்கு  உப்பு வேண்டாம் என்பதே சரியாகும். மனிதன் சாப்பிட வேண்டியதை சாப்பிட்டு வாழ்வதானால்  அதில் உப்பை கலக்க வேண்டாம்.

உப்பும் உடலும்:

அரித்துக் கொல்லும் உப்பை உடல் செரிமானம் செய்வதுமில்லை, செலவுசெய்வதுமில்லை.   உடலுக்கு அது தேவையுமில்லை என்பதால் உண்ட உப்பைமுழுவதையும் உடல் வெளியே தள்ளி 
விடுகிறது. உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பது அந்த உப்பை கரைத்து வெளியேற்றதான்.   உடலுக்கு தேவையற்ற உப்பைதான் விலைக்கு வாங்கி உணவுடன் சேர்த்து வேக வைத்து  உண்கிறோம். அறிவில்லாதவனுக்கு ஒழிவில்லாத வேலை என்பது பழமொழி. கருவறையில் தொடங்கி  மனிதனின் இறுதி மூச்சுவரை இந்த வீண் வேலை நடந்து கொண்டே இருக்கிறது.


உணவில் உப்பிருக்கும்வரை உடல் உப்பு நீக்கி எந்திரமாக செயல் பட்டுக்கொண்டே  இருக்கும்.  அதனால் மனிதன் உழைக்காமலேயே களைப்படைகிறான். ஓய்விலும் தூக்கத்திலும்  கூட வியர்க்கிறது; வியர்வையை உறிஞ்ச உள்ளாடைகள் தேவைபடுகின்றன. உப்பின் அரிப்பை  உணராமல் இருக்க மின்விசிரியும்;  குளிர்பதன அறையும் தேவைப்படுகிறது. வியர்வை  நாற்றத்தை போக்க வாசனை திரவியங்கள் தேவைப்படுகின்றன.  உப்பை விட்டு  வாழ்கின்றவனக்கு  வெயிலும் மழையும் பணியும் குளிரும் உடலுக்கு இதமாகவே இருக்கிறது; உலகமே AC 
அரங்கமாகிவிடுகிறது.

உப்பு, உணவுப் பாதையில் இருக்கும் வரை உடலுக்குக் கேடில்லை. உப்பு உணவு பாதையை  அரிக்கமுடியாது ஆனால் அங்கிருந்து இரத்தத்திற்கு வரும் உப்பு உடலை அரிக்கத்  தொடங்கிவிடும். அதனால் மொத்த உடலும் முயன்று உழைத்து அதிக இரத்த ஓட்டத்தின் மூலம்  உப்பை வெளியேற்றுகிறது.  உடலைவிட்டு வெளியேறும் எல்லா திரவங்களின் வழியாகவும் உப்பு 
வெளியேறுகிறது. அதனால்தான் வியர்வையிலும் சிறுநீரிலும் உப்பின் சுவையை மட்டும்  உணர்கிறோம்.  புளிப்பும் காரமும் இனிப்பும் மற்ற சுவைகளும் செரித்து விடுகின்றன, செலவாகி விடுகின்றன. தேவையற்ற உப்பை உணவில் சேர்ப்பது சுவைக்காக கூட அல்ல! உடலில்  செல்லுபடியாகாத பண்டங்களை செல்லுபடியாக்கத்தான் அவற்றுடன் உப்பை சேர்த்து வேக 
வைத்து உண்கிறோம்.


உடலும் உணவும் :

அரிசி, பருப்பு, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உலர்ந்த உணவுப் பண்டங்களை  நேரடியாக உண்டு வாழும்போது ரத்தவோட்டம் தடைபடுகிறது.  அதனால் இவையெல்லாம் மனித 
உடலுக்கு பொருத்தமற்ற உணவுப்பண்டங்கள் ஆகும்.  இவற்றுடன் உப்பை சேர்த்து வேக வைத்து  உண்டால் ரத்தவோட்டம் தடைபடுவதில்லை.  உப்பிற்காக உடலில் தேக்கப்படும் தண்ணீரும் 
உப்பிற்கான அதிக ரத்தவோட்டமும் சேர்ந்து இரத்தவோட்ட தடையை உடைக்க உதவுகிறது.

அடுப்பெரிக்க விறகு பயன்படுவதை போல உடலில் அதிக ரத்தவோட்டத்தை உண்டாக்கவும், உடலில்  தண்ணீரை தேக்கவும் உப்பு பயன்படுகிறது. தவறான உணவு பண்டங்களை உண்டு வாழ உப்பு  உதவுகிறது.  மனிதனுக்கு உப்பு இந்த ஒரே ஒரு உதவியை செய்து விட்டு மற்ற எல்லா  துன்பங்களையும் கொண்டுவருகிறது. உணவல்ல உப்பு, உபகார சத்ரு!

உப்பை தின்னும் மனிதன் இயற்கையான இரத்தவோட்டத்தில் வாழ முடிவதில்லை. உப்பிற்கான  இந்த அதிக இரத்தவோட்டம், செயற்கையான இரத்தவோட்டமாகும்; தவறான இரத்தவோட்டமாகும்.  இந்த தவறான இரத்தவோட்டம் மனிதனின் இயற்கையான உடல்நலத்தையும், உள்ள நலத்தையும் 
பாதிக்கிறது. அதனால் உடலில் உப்பிருக்கும் வரை மனிதன் மனிதனாக வாழ முடிவதில்லை.

சாமியார் பூனை வளர்த்த கதையாக உணவுக்கு உப்பு வந்ததால் தேவையற்ற எல்லா தேவைகளும்  வந்தன, எல்லா குற்றம் குறைகளும் கொடுமைகளும் வந்தன. உப்பு, பஞ்சமா பாதகங்களையும்  செய்ய வைக்கிறது.  உடலுக்கும், மனதிற்கும், சமுதாயத்திற்கும், நோய்களைத் தருகிறது. 
உடலிலும் ஊரிலும் சாக்கடையைத் தேக்குகிறது. சமையல் இல்லையேல் சாக்கடை இல்லை.

உப்பும் சமையலும்:

உணவில் உப்பை கலப்பதைத்தான் சமைத்தல் என்கிறோம். ஆகவே உப்பை விடுவது என்றால் சமைத்த  உணவை விடுவது என்று பொருள்.சமைத்தல் என்ற சொல்லுக்கு தயார் செய்தல், 
பக்குவப்படுத்துதல் என்றெல்லாம் பொருள். 
உணவை வேக வைப்பதே அதில் உப்பை  கலப்பதற்காகத்தான்.

ரத்தத்தில் உணவும் உப்பும் சீரான அளவிலும், போதுமான அளவிலும் கலந்து  ஓடுவதற்காகத்தான் உணவை சமைக்கிறோம். 
மனிதன் பானை செய்ய கற்பததற்குமுன் உணவையும் 
உப்பையும் சேர்த்து, இடித்து தூளாக உண்டு வாழ்ந்தான்.
 பின்னர் உணவையும் உப்பையும்  சேர்த்து அரைத்து துவையலாக உண்டு வாழ்ந்தான். இன்று நெருப்பே இல்லாமல் நுண்ணலை 
அடுப்பிலிட்டு உணவையும் உப்பையும் சேர்த்து வேக வைத்து உண்கிறான்.

உணவில் உப்புக்காக புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், காரத்திற்காக  எண்ணையையும் உணவில் சேர்க்கிறோம். உணவுக்கு உப்பு வேண்டாம் என்றால் இவற்றை சேர்த்து 
வேக வைக்கவும் வேண்டாம். உணவை மட்டும் நேரடியாக உண்டு வாழலாம்.

மனித உடலுக்கு பொருத்தமான உணவுகள்:

பழங்கள், பச்சை காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் , அவல்,  தேங்காய் போன்ற  கொட்டைகளின் பருப்புககள், உலர்ந்த பழங்கள், தேன், இளநீர், நுங்கு, பதநீர் போன்ற  உணவு பண்டங்களை எத்தனை ஆண்டுகள் நேரடியாக உண்டு வாழ்ந்தாலும், ரத்த ஒட்டம் தடை  படுவது இல்லை.  ஆகவே இவையெல்லாம் மனித உடலுக்கு பொருத்தமான உணவுப் பண்டங்கள் ஆகும்,  மனிதன் உண்டு வாழ வேண்டிய உணவு பண்டங்கள் ஆகும், மனிதனின் இயற்கையான உணவுகள் ஆகும்.





மற்ற விலங்கினங்கள் அதனதன் உடலமைப்பிற்கும், உறுப்புகளின் அமைப்பிற்கும்,  பொருத்தமான உணவுகளை தேர்வு செய்து பரம்பரையாக அவற்றை மட்டுமே உண்டு வாழ்கின்றன. 
அதனால் அவற்றிற்கு உப்பு தேவைப்படுவதில்லை. உலகெங்கும் எக்காலத்தும் ஆட்டுக்கு உணவு  இலை தழைகளே,  மாட்டுக்கு உணவு புல் வகைகளே! புலி சிங்கம் போன்ற ஊன் உண்ணிகளுக்கு 
உணவு மாமிச வகைகளே. அவையெல்லாம் அதனதன் இயற்கையான உணவுகள் ஆகும். அதனால்தான் புலி  பசித்தாலும் புல்லை தின்பதில்லை.

காட்டில் வசிக்கும் தாவர உண்ணிகள் தவறான உணவுகளை மேய்ந்து விடும்போது மட்டும் உப்பை  தேடி அலைந்து நக்கி ரத்தவோட்ட சிக்கலை சரி செய்து கொள்கின்றன.  ஆறறிவு மனிதன் விவசாயம் செய்து தவறான உணவுகளையும் உப்பளங்களையும் தயார் செய்து சமைத்து உண்கிறான்.

மற்ற எல்லா விலங்கினங்களும் உப்பின்றி வாழ்வதால் பிறப்பு முதல் இறப்பு வரை நோயின்றி  வாழ்கின்றன. சோம்பல் சோர்வு களைப்பு என்றால் என்னவென்றே உணராமல் வாழ்கின்றன. அதனால் 
அடுத்தவர் உதவியின்றி வாழ்கின்றன காம வெறியின்றி வாழ்கின்றன.

அவை வாழ நிலமும், நீரும், உணவும், காற்றும், கதிரும் மட்டுமே போதுமானவை. மனித  இனமும் விலங்கினம்தான் என்பதால் மனிதனும் அப்படி தனக்குரிய உணவு பண்டங்களை 
இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ முடியும்.

எனது உணவு அனுபவங்கள்:

எனது வயது 60. நாற்பதிலிருந்து 55 வயது வரை சமைக்காத இயற்கை உணவுகளை மட்டுமே உண்டு  வாழ்ந்தேன் (அதிலும் தேங்காயையும், வாழைப்பழங்களையும் மட்டுமே உண்டு வாழ்ந்தேன்.)   
அந்த 15 ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்ந்தேன்.

மீண்டும் கடந்த 5 ஆண்டுகளாக சமைத்த உணவுக்கு மாற முயன்று வருகிறேன், முடியவில்லை.
அதிலுள்ள உப்பை உடல் ஏற்கவில்லை.  அந்த 15 ஆண்டுகளில் என் உடலின் உயிரணுக்கள் பல தலைமுறைகள் புதுபிக்கபட்டு விட்டன. ஆகவே அவையெல்லாம் உப்புக்கு பழக்கபடாதவை 
என்பதால் இன்றைய உடல் உப்பை ஏற்கவில்லை.

மீண்டும் படிப்படியாக உடலுக்கு உப்பை பழக்க மேலும் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதற்கு  மீதமுள்ள ஆயுள் போதாது என்பதை உணர்கிறேன்.

உப்பைவிட்டால்… மனித குலம் அடையும் நன்மைகள்


  • ஒரு நாளைக்கு ஒரு கிலோ உணவு போதும். அதற்கு மேல் உண்ண முடியாது.
  •  ஒரு லிட்டர் தண்ணீர் போதும்.  அதற்கு மேல் தேவைபடாது.  இயற்கை உணவிலுள்ள தண்ணீரே கூட போதும்.  உப்பை தின்றவன் தான் தண்ணீரை அதிகம் குடிப்பான். 
  • நான்கு மணி நேர தூக்கம் போதும். அதுவும் கோழித் தூக்கமே. கனவுகளே வருவது இல்லை.  இடையில் சமைத்த உணவை உண்டு பார்த்தால் மட்டுமே கனவுகள் வருகின்றன.




  • யோகாசனம், பிராணாயாமம், தியானம் செய்யாமலேயே அதன் பயன்களை அனுபவிக்க முடியும். 
  • காமவெறி இல்லை ஆண், பெண் வேறுபாடில்லை. அதனால் உடை கூட வேண்டாம். 
  • பெண்களுக்கு மாதவிடாய் நீண்டு வருட விடையாக நீளும்.
  •  மரம், செடி கொடிகளில் தானாக விளைவதே போதும். 
  • விவசாயம் செய்ய வேண்டாம்.
  •  உப்பலங்கள் வேண்டாம். 
  • வண்டி வாகனங்கள், கருவிகள், சாலைகள் வேண்டாம்.
  • யாருக்கும் யாருடைய உதவியும் வேண்டாம். 
  • அதனால் பேச்சும், எழுத்தும், மொழியும் வேண்டாம். 
  • அதனால் விருப்பு வெறுப்புக்கோ, பந்த பாசத்திற்கோ அவசியமில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழலாம் . 
  • வெயிலும், மழையும், பணியும், குளிரும் உடலுக்கு இதமாகவே இருக்கும், உலகமே AC அரங்காக மாறிவிடும் அதனால் வீடு வேண்டாம்.
  • தன்னிறைவு, தற்சார்பு, தன்னாட்சி – இவை எல்லாம் தானாகவே வந்து விடுவதால் அரசாங்கம் வேண்டாம். 

மனித இனமும் விலங்கினம்தான்.

உப்பு உணவு பொருள் அல்ல! ஆகவே மனிதன் மட்டும் உப்பை தின்பது மடமை, கொடுமை!


பின்குறிப்பு: 

முயற்சி உடையோர் உப்பை தின்னும் காரணத்தை அவரவர் உடலிலேயே சோதித்து  உணர முடியும். 
நான்கு நாட்கள் வரை தண்ணீரை மட்டும் கொண்டு உண்ணா நோண்பிருக்க வேண்டும்.  உடலில் உள்ள பழைய உணவும், உப்பும் நீங்கி விடும். 

உண்ணா நோன்பிருக்க முடியாதவர்கள் பழங்களை மட்டும் உண்டு வரலாம். அந்நிலையில் டி, காபி , பிஸ்கட்,  வறுகடலை, பட்டாணி, மிக்சர் போன்ற உப்பில்லாத அல்லது உப்பு குறைந்த உணவு பண்டங்களை  உண்டு பார்த்தல் சில நிமிடங்களில் இருமல் வரும். நுரையிரல் ரத்தவோட்டம் தடை  படுகிறது என்பது இதன் பொருள். உடனே உப்பு நீரையோ, சாம்பார் சாதமோ சாபிட்டால், இது 
சரியாகிவிடும். ஆனால் இயற்கை உணவுகளை எத்தனை வருடங்கள் சாப்பிட்டாலும்  ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுவதில்லை!

வாழ்க வளமுடன்!!!

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

இயற்கை ஆர்வலர் மு.சண்முகம்

 வடலூர்
(07373409230)
vadalurshanmugam@gmail.com