Tuesday, September 20, 2016

ஆகாரமின்றி வாழும் அதிசய மனிதர்

பல ஆண்டுகளாக ஆகாரமின்றி வாழும் அதிசய மனிதர்

ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் இனியன். முன்னாள் ராணுவ வீரர். கடந்த 13 ஆண்டுகளாக நீரை மட்டுமே உணவாக எடுத்து வாழ்ந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி வந்திருந்த அவர் கூறியதாவது: 2002 மார்ச் 15ம் தேதி முதல் நீர் உணவு முறைக்கு மாறிவிட்டேன். அது முதல் நீரை ஆகாரமாகவும், விண்வெளி, தூய்மையான காற்று, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு எனது உடல் பழக்கப்பட்டு விட்டது. அது ஆரோக்கியமாகவும் இயற்கை சார்ந்த விஷயமாகவும் உள்ளது. இது அதிசயம் அல்ல. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அதுபோல் தான் இருக்கின்றனர். இந்தக் கலையை மற்றவர்களுக்குப் பரவச்செய்யவும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
வாழ்வில் ஒருமுறை நீருணவுப் பயிற்சியை எடுத்துக் கொண்டு விட்டால் போதும். அப்புறம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவு முறைக்கு மாறிவிடலாம். எப்போது ஆரோக்கியமும் உணீடல் பலமும் நிம்மதியும் தேவைப்படுகிறதோ அப்போது தனக்குத் தானே கடைபிடித்துக் கொண்டால்போதும்.
நீருணவு உட்கொண்டால் மருத்துவமனைகள் தேவைப்படாது. இது உடல் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. மனதளவில் தயாராகி விட்டால் ஒவ்வொருவரும் யோகி தான். அதனால் இந்த வாழ்க்கை முறையை யோக வாழ்வு என்கிறோம். ஜீரண நீரை நிறுத்தாமலோ பசியைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கமோ இல்லாவிட்டால் விண்வெளிப் பயணம் சாத்தியமில்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் புரிந்த மற்றவர்களால் அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியை சாதாரண மக்களும் கடை பிடிக்கும் வண்ணம் இப்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதுதான் யோக மருத்துவம்.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=112293

“உலக நோய்கள்லயே ரொம்பக் கொடுமையானது பசி நோய்... எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம் அதுதான். பசி நோய் மட்டும் இல்லேன்னா, உலகமே அமைதிப் பூங்காவா இருக்கும். அந்த நிலை நோக்கி மனிதர்களை நகர்த்துறதுதான் என் லட்சியம். அந்த முயற்சியில பாதியளவுக்கு வெற்றியடைஞ்சிருக்கேன்.
உணவே சாப்பிடாத ஆயிரக்கணக்கான காற்றுணவு மனிதர்களை உருவாக்கியிருக்கேன்...’’ - புன்னகையோடு சொல்கிற இனியனைப் பார்க்கவும், கேட்கவும் பெருவியப்பு! ஒன்றல்ல இரண்டல்ல... கடந்த 13 வருடங்களாக உணவே இல்லாமல் வாழ்கிறார் இந்த மனிதர்!
"‘நீர், நிலம், காற்றுனு எல்லாமே விஷமாகிடுச்சு. அடுத்த தலைமுறை இந்த பூமியில வாழ முடியாது. நிச்சயம் வேறு வாழிடம் தேடியாகணும். அதுக்குத் தீர்வு விண்வெளி வாழ்க்கை. விண்வெளி வாழ்க்கைக்கான வேலைகள் ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா... ஏன் நம்ம இந்தியாவுலயும் கூட நடந்துக்கிட்டிருக்கு.
அந்த விண்வெளி வாழ்க்கைக்கான முன்னேற்பாடுகள்ல ஒண்ணுதான் காற்றுணவு வாழ்க்கை. இது முற்றிலும் அறிவியல்பூர்வமானது. நம் சித்தர்கள் அப்படித்தான் வாழ்ந்தாங்க. பயிற்சியும், உறுதியும் இருந்தா எல்லோரும் இது மாதிரி வாழலாம்’’ என்கிற இனியனுக்கு சொந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம். அந்தக் கால பி.யூ.ஸி. ராணுவத்தில் 2 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
‘‘அப்பாவுக்கு சித்தர்கள் மேல நிறைய நாட்டம். ஜீவ சமாதிகளுக்கெல்லாம் அழைச்சிட்டுப் போவார். சித்தர் பாடல்களைப் பாடுவார். எனக்கு இயற்கை உணவு, இயற்கை வாழ்வியல் மேல பள்ளிக் காலத்துலயே நல்ல புரிதல் இருந்துச்சு. மிலிட்டரியில இருந்து திரும்பின பிறகு எனக்குள்ள நிறைய தேடல்கள். நீதிவெண்பா, திருக்குறள்னு நிறைய வாசிக்கத் தொடங்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நம்ம இலக்கியங்கள் சொல்ற வாழ்க்கை முறை எதையுமே நாம எடுத்துக்கல.
திருக்குறளைக் கூட இன்னும் முழுசா பயன்படுத்தலே. 'யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்...’னு வள்ளுவர் சொல்றார். 'எதன் மீதெல்லாம் ஆசையைக் குறைக்கிறாயோ அதில் இருந்தெல்லாம் விடுபடுவாய்...' - இந்த சிந்தனை என்னை வேறு பாதைக்கு அழைச்சிட்டுப் போச்சு.
'ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி'னு ஒரு சித்தர் சொல்றார். நிறைய குழப்பங்களோட மேலும் மேலும் தேடினேன். வள்ளுவர் 'மருந்து'னு ஒரு அதிகாரம் எழுதி யிருக்கார். ஆனால், இது தான் மருந்துன்னு எதையும் சொல்லல...
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்...'னு அவர் எழுதின குறளோட உண்மையான பொருள் இது வரைக்கும் சொல்லப்படவே இல்லை. யாருமே ஆராய்ச்சி நோக்கத்துல குறளுக்கு உரை எழுதல. 'உடம்புக்கு எந்த மருந்தும் தேவையில்லை. வயித்துக்குள்ள கொஞ்சமா நீர் மட்டும் இருந்தாப் போதும்'கிறார் வள்ளுவர். 'அர்னால்டு எகிரேட்' தியரியும் அதைத்தான் சொல்லுது.
ஜெர்மனைச் சேர்ந்த டாக்டர் அர்னால்டு எகிரேட் புற்றுநோயால பாதிக்கப்பட்டார். தனக்கு புற்றுநோய் வர நவீன உணவுகள்தான் காரணம்னு அவரே கண்டுபிடிச்சார். மரணமில்லாப் பெருவாழ்வுக்கு தடையா இருக்கிறது உணவுதான்னு அவர் சொல்றார். கிட்டத்தட்ட எகிரேட் மாதிரியே தமிழ்நாட்டுல இருக்கவர்தான் மன்னார்குடி வெங்கடேசன் ஐயா. உலகப்புகழ் பெற்ற கட்டுமானப் பொறியாளர் அவர். பல்வேறு நோய்களுக்கு உள்ளான பிறகு அவர் வடிவமைச்சதுதான், உணவில்லாமல் வாழும் கலை. கோவை பக்கத்துல நரசிபுரத்துல இருக்கார். அவரைப் போய் பாத்தேன். நிறைய பேசினார். உணவில்லா வாழ்க்கையைக் கத்தும் கொடுத்தார்.
உலகத்துலயே கொடுமையான நீர், நம் உடம்புல சுரக்குற ஜீரண நீர்தான். ஹைட்ரோகுளோரிக் ஆசிட்னு சொல்லப்படுற அதைக் கட்டுப்படுத்திட்டா மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியம். அதுக்கு சில வழிமுறைகளைக் கத்துத்தந்தார். 'பசி வர்றப்போ அதைக் கட்டுப்படுத்த மாவுச்சத்தில்லாத காய்கறிகள் சாப்பிடு... உள்ளே இருக்கிற கழிவுகளை வெளியேத்தவும், உராய்வைக் குறைக்கவும் கொஞ்சமா தண்ணி குடிச்சிக்கோ'னு சொன்னார். ரொம்பவும் கஷ்டமா இருந்தா இடையில ரெண்டு பேரிச்சம்பழம் சாப்பிடு...’’னு சொன்னார்.
பயிற்சி எடுத்து 85வது நாள் எனக்கு ஜீரண நீர் சுரப்பு நின்னுடுச்சு. பசி உணர்வே வரல. 74 கிலோ இருந்த என் உடம்பு 54 கிலோவாச்சு. தேவையில்லாத சளி, கொழுப்பு, விஷம்... எல்லாம் உடம்புல இருந்து விலகிடுச்சு. அதுக்கப்புறம் இந்த 13 வருடத்துல ஒரு கிலோ கூட குறையலே. இப்போ மருந்து மாதிரி கொஞ்சம் தண்ணி... எப்போவாவது 2 பேரிச்சை... அவ்வளவுதான்.

காத்துல இருக்கிற ஆக்ஸிஜனை மட்டும்தான் நாம பேசுறோம். அதில், 78% நைட்ரஜனும் இருக்கு. நம்ம சுவாசத்துக்குள்ள போற நைட்ரஜனை உடம்பு புரோட்டீனா மாத்திக்கும். மருந்துக்கு நீர்.... உணவுக்குக் காத்து... இன்னைக்கு மிகப்பெரும் சுதந்திர மனிதனா உலவுறேன். நிறைய மலையேற்றங்கள் செய்யறேன்.
உலகம் முழுக்க பயணிச்சு நீருணவு பயிற்சி கொடுக்கறேன். எந்த நோயும் என்னைத் தீண்டினதில்லை. உணவுக்கும் சக்திக்கும் சம்பந்தமில்லைங்கிறதை நிரூபிக்கிறதுக்காக சில வருடங்களுக்கு முன்னால ரெண்டாவதா ஒரு குழந்தையையும் பெத்துக்கிட்டேன். என் மனைவி, குழந்தைகளும் கூட இதே வாழ்வியலுக்கு வந்துக்கிட்டிருக்காங்க!’’ என்கிற இனியனுக்கு இப்போது தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள்

No comments:

Post a Comment