Wednesday, September 21, 2016

Paal Kaalan Valarpu | Button kaalan Valarpu | பால் காளான் வளர்ப்பு | பட்டன் காளான் வளர்ப்பு | Mushroom Cultivation

Paal Kaalan Valarpu | Button kaalan Valarpu | பால் காளான் வளர்ப்பு | பட்டன் காளான் வளர்ப்பு | Mushroom Cultivation in tamil |

Paal Kaalan Valarpu | Button kaalan Valarpu | பால் காளான் வளர்ப்பு | பட்டன் காளான் வளர்ப்பு | Mushroom Cultivation in tamil 

காளான் வளர்ப்பு பயிற்சி siru tholil suya tholil suya thozhil ideas in tamil 

காளான் விதை கிடைக்கும் இடம்


சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

Kaalan Valarpu 

                                                                             
       

''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்''                                                                                                            
                                                                                                                                                                              

                                சிப்பி காளான் வளர்ப்பு வீடியோ கீழே 

|
|
|
V




Star Global Agri Farms,Dharmapuri 
Contact: 9944858484

பண்ணை அமைந்துள்ள இடங்கள் 

1)தருமபுரி ,பாரதிபுரம்
2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை 

3)ஈரோடு,பள்ளிபாளையம் .

நேரடியாக பண்ணையை பார்வையிடலாம். பண்ணையில்

பயிற்சி  பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)

மேலே குறிப்பிட்ட பண்ணைகளில் எந்த பண்ணை உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அந்த பண்ணையில் நீங்கள் பயிற்சி எடுத்து கொள்ளலாம் .


பயிற்ச்சியில் நீங்கள் தெரிந்து கொள்ள இருப்பது 


1)காளான் விதை தூவுவது எப்படி ?
2)தண்ணீர் எவ்வாறு தெளிப்பது ?
3)காளான் படுக்கையில் நோய் தொற்று ஏற்படுவதன் அறிகுறிகள் ?
4)நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு?
5)ற்பட்ட  நோய் தொற்றை பறவாமல் தடுப்பது எவ்வாறு?
6)நோய் தொற்றை கட்டுப்படுத்த  என்னென்ன மருந்துகள் உபயோகபடுத்துவது ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?
8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?
9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?


நீங்கள் வீடியோ மூலம் காளான்  வளர்ப்பை  புரிந்துகொண்டால் 

நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம் 
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )

சோதனைக்காக  1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)(12-24 இன்ச் காளான்  பாலிதீன் பைகள்  சேர்த்து அனுப்படும் )
தேவை பட்டால் காளான் வளர்ப்பு புத்தகம்  அனுப்பப்படும் 
காளான் வளர்ப்பு புக் / புத்தகம்        
   Kaalan Valarpu Book Fos Sale           



ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் . 
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை  பெறலாம் 

Contact: 9944858484
திட்ட அறிக்கை :

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை 
3)பாலிதீன் பை 
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]

***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல் 
ரூ .50  [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]

***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும்  } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது  3 நாட்கள் இடைவெளியில்  அடுத்த அடுத்த அறுவடை ]

***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60. 
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )

---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த  விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


விற்பனை :

1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 450( ஒரு காளான்  பைக்கு )
                                

2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


உற்பத்தி செய்யும் காளானை சந்தைபடுத்தும் முறைகள்


1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் சமையல் மாஸ்டர்களை அணுகவும் ,  ஒருமாதத்தில்  நான்கு அல்லது ஐந்து விஷேசங்களில் வெசிடபள் /காய்கறி பிரியானிக்கு பதில் காளான் பிரியாணியை சமைக்க வலியுறுத்த சொல்லலாம் . சமையல் மாஸ்டர்களுக்கு ஒரு சிறு தொகையை
கமிசன் னாக குடுக்கலாம் இதன் மூலம் வாரத்திற்கு 20 முதல் 30 கிலோவை சுலபமாக விற்கலாம் .

2) விஷேச பத்திரிக்கை அச்சு அடிக்கும் இடத்தில் எளிதாக விஷேச வீட்டுகாரர்களின் மொபைல் எண்ணை ஒரு வாரம் முன்னதாகவே பெற்று அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம் .

3)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் அதிக மக்கள் வந்து போக கூடிய இடத்தில் இருக்கும் ஒரு பெரிய மளிகை கடையை அல்லது மெடிக்கல் அனுகி "இங்கு காளான் கிடைக்கும்" என்ற கலர் பிரிண்ட்(காளான் படத்துடன்)  எடுத்து மக்கள் பார்க்கும்படி ஒட்டவும் , மக்களே கேட்டு வாங்கி செல்வார்கள். ஒரு கடைக்கு 5 பக்கெட் என்றால் கூட பத்து கடைக்கு ஒரு நாளைக்கும் 50 பக்கெட் சுலபமாக மார்க்கெட் செய்யலாம். (கடைக்கு ஒரு பக்கெட்-ஐ ௫.35  என்ற விலையில் தந்து கடைக்காரர் 45 /50  விலையில் விற்கலாம்)

4)தற்போது மக்கள் பகிரியில் அதிகம் வெஜிடபள் பப்ஸ்-க்கும் பதில் காளான் பப்ஸ்-ஐ அதிகம் விரும்பி உண்ண தொடங்கி விட்டார்கள் ,  பாக்கிரிகளை அனுகி,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.

5)உங்கள் பக்கத்துக்கு டவுனில் பஸ்டாண்டில் தள்ளு வண்டியில் காளான் சமைத்து விற்பார்கள், அங்கும் மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம். .

6)தற்போது பல இடங்களில் வெஜிடபள் சமோசா விற்பார்கள் , அங்கு காளான் சமோசாவை அறிமுகபடுத்தலாம் ,அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.

7)தற்போது பல இடங்களில் கோழி/ஆட்டுகால் சூப் விற்பனை செய்கின்றனர் , அங்கு காளான் சூப் அறிமுகபடுத்தலாம், அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.

8)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில்   நீங்களா ஒரு சிறு ரூமை வாடகைக்கு எடுத்து ஒரு பரிட்சு(Fridge) ஒரு RS.3000 சம்பளத்தில் ஒரு பெண் வேலையாள் , கடை மேலே ஒரு பெரிய பேனர் "இங்கு காளான் கிடைக்கும், ஆர்டரின் பேரில் விஷேசங்களுக்கு சப்ளை செய்யப்படும்" என்று காளான் படத்துடன்பெரிய பேனர் வைக்கவேண்டும் , ஒரு நாளைக்கு 30 முதல் 50 பக்கெட் வரை சுலபமாக விற்பனை செய்யலாம்.

9)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில்  தினசரி மார்க்கெட் கண்டிப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆள் போட்டு சில்லரை விலையில் (Rs.45/Rs.50 )   அல்லது  கடைகாரரிடம்  மொத்த  விலையில்(Rs.35 / Rs.40) விற்பனை  செய்யலாம் 
காளான் வளர்ப்பு படுக்கை தயார் 

செய்யும் வீடியோ 



|
|
|
V

                                                                                










Paal Kaaln Valarpu Video

பால்  காளான் வளர்ப்பு வீடியோ கீழே 

|
|
|
V



  காளான் வளர்ப்பு வீடியோ
|
V
          





காளன் வளர்ப்பு - செய்முறை விளக்கம்   







siru tholil suya tholil suya thozhil ideas in tamil








சிப்பி& பால் காளான் வளர்ப்பு 

சிப்பிகாளான் வளர்ப்பு 

மருத்துவ பலன்களும், உணவு முறையும்: 


இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.

வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.


விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
(Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு:

 செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!


தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.



பால் காளான் வளர்ப்பு 


இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில்  ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.


திட்ட அறிக்கை :

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2)காளான் விதை 
3)பாலிதீன் பை 
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]

***ஒரு காளான் பை (12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 முதல் 
ரூ .50  [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ]

***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும்  } [ 18 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது  3 நாட்கள் இடைவெளியில்  அடுத்த அடுத்த அறுவடை ]

***200 கிராம் பக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60. 
------>>( 1 கிலோ 250 முதல் 300 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )

---->>சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] சில்லரை விலை -->ரூ 500
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 500-50= ரூ 450( ஒரு காளான்  பைக்கு )

***200 கிராம் பக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30 .
------>>( 1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 - சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும் )
------>> மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ 220 ( ஒரு காளான்  பைக்கு )

அதவாது , 2 கிலோ[ஒரு காளான் பையில் ] மொத்த  விலை -->ரூ 270
ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
                    லாபம் = 270-50= ரூ 220( ஒரு காளான்  பைக்கு )


விற்பனை :

1)நீங்களாக மார்கெட் செய்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 450( ஒரு காளான்  பைக்கு )
                                

2)மொத்த வியாபாரியிடம் கொடுத்தால் ஒரு காளான் பைக்கு [12*24 இன்ச்]
உங்களுக்கு கிடைக்கும் வருமானம்  =>ரூ 220( ஒரு காளான்  பைக்கு )



Star Global Agri Farms,Dharmapuri 

 Contact: 9944858484

Farm Located at Nerinjipettai, Mettur.

நேரடியாக பண்ணையை பர்வையிடலாம். பண்ணையில்

பயிற்சி  பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)


Star Global Agri Farms,Dharmapuri 
Contact: 9944858484

பண்ணை அமைந்துள்ள இடங்கள் 

1)தருமபுரி ,பாரதிபுரம்
2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை 

3)ஈரோடு,பள்ளிபாளையம் .

நேரடியாக பண்ணையை பார்வையிடலாம். பண்ணையில்

பயிற்சி  பெற பயிற்சிகட்டணம் :ரூ 1500(பயிற்சி சான்றிதழுடன்)

மேலே குறிப்பிட்ட பண்ணைகளில் எந்த பண்ணை உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அந்த பண்ணையில் நீங்கள் பயிற்சி எடுத்து கொள்ளலாம் .


பயிற்ச்சியில் நீங்கள் தெரிந்து கொள்ள இருப்பது 


1)காளான் விதை தூவுவது எப்படி ?
2)தண்ணீர் எவ்வாறு தெளிப்பது ?
3)காளான் படுக்கையில் நோய் தொற்று ஏற்படுவதன் அறிகுறிகள் ?
4)நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு?
5)ற்பட்ட  நோய் தொற்றை பறவாமல் தடுப்பது எவ்வாறு?
6)நோய் தொற்றை கட்டுப்படுத்த  என்னென்ன மருந்துகள் உபயோகபடுத்துவது ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?
8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?
9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?


நீங்கள் வீடியோ மூலம் காளான்  வளர்ப்பை  புரிந்துகொண்டால் 

நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம் 
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ )

சோதனைக்காக  1 கிலோ விலை ரூ 200.(Sample for Test)(12-24 இன்ச் காளான்  பாலிதீன் பைகள்  சேர்த்து அனுப்படும் )

ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் . 
இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை  பெறலாம் 

Contact: 9944858484



பால்/பட்டன் காளான் வளர்ப்பு வீடியோ கீழே 



|
|
|
V



''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.

                                             
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.




மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

No comments:

Post a Comment